மேலும் அறிய

Actor Ajith father: நடிகர் அஜித் தந்தை மரணம்: முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

 தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் சென்னையில் காலாமானார். மறைந்த சுப்பிரமணித்தின் உடல் இன்று சென்னை பெசண்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

 தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் சென்னையில் காலாமானார். மறைந்த சுப்பிரமணித்தின் உடல் இன்று சென்னை பெசண்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

சுப்பிரமணியம் கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சுமார் 3.15 மணியளவில் உடல்நலக் குறைவால் காலமானார்.  இது நடிகர் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் அஜித்தின் தந்தை காலமான செய்தி அறிந்த திரைத்துறையினர், அவர்களது உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் பலர் திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரடியாகச் சென்று மறைந்த சுப்பிரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நடிகர் அஜித்தின் தந்தை மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார். 

அதேபோல், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா தனது இரங்கல் குறிப்பில், “பிரபல நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை பாலசுப்ரமணியம் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தந்தையின் மறைவு அஜித் அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். தனது தந்தையை இழந்து இருக்கும் இந்த கடினமான நேரத்தில் அன்பு சகோதரர் அஜித் அவர்களுக்கு இதனை தாங்கிக்கொள்ளும் மனவலிமையையும், தைரியத்தையும் வழங்க வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன். தந்தையை இழந்து வாடும் அன்பு சகோதரர் அஜித் அவர்களுக்கும்,அவரது குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும்,அவருடைய ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தனது இரங்கல் குறிப்பில், ”தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியன் அவர்கள் காலமானதை அறிந்து வருத்தமடைந்தேன். அவர் நல்ல மனிதர். அவரை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”

திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Embed widget