விஜய்க்கு போட்டியாக சம்பளத்தை உயர்த்திய அஜித்...அடுத்த படத்திற்கு இத்தனை கோடியா ?
குட் பேட் அக்லி படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

விடாமுயற்சி
அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மகிழ் திருமேணி இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். அர்ஜூன் , த்ரிஷா , ரெஜினா , ஆரவ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார் பந்தையத்தில் அஜித்
தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டார்களில் ஒருவரான அஜித் பல வருடங்கள் கழித்து மீண்டும் கார் ரேஸிங்கில் களமிறங்கியுள்ளார். துபாயில் நடைபெற்ற கார் பந்தையத்தில் அஜித் குமார் ரேஸிங் சார்பாக அவர் மற்றும் அவரது குழுவினர் கலந்துகொண்டனர். இப்போட்டியில் அஜித்தின் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து கவனமீர்த்தது. திரைப்பட நடிகராக இருந்து கார் பந்தையத்தில் அஜித் கலந்துகொண்டிருப்பது சர்வதேச அளவில் கவனமீர்த்துள்ளது. அடுத்தடுத்து வரக்கூடிய பல்வேறு சர்வதேச போட்டிகளில் அஜித் கலந்துகொள்ள இருக்கிறார். வரும் மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரை சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து போட்டியில் கவனம் செலுத்த இருப்பதாக அஜித் தெரிவித்துள்ளார். அக்டோபர் மாதத்திற்கு பின் அஜித் தனது 64 ஆவது படத்திற்கான வேலைகளை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது
மீண்டும் இணையும் அஜித் விஷ்ணுவர்தன் கூட்டணி
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி அஜித் நடிக்கும் அடுத்த படத்தை ரெட் ஜயண்ட் மூவீஸ் தயாரிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த படத்திற்காக அஜித்திற்கு 200 கோடி சம்பளமாக வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது , பில்லா , ஆரம்பம் படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் இந்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் விஷ்ணுவர்தன் கூட்டணி மீண்டும் இணைய இருப்பது ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் விஷ்ணுவர்தன் மீண்டும் அஜித்துடன் இணைய இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
As per VP,#AK64 - Red Giant Movies has offered a massive remuneration of 200Cr+ to #AjithKumar 👀🔥
— AmuthaBharathi (@CinemaWithAB) January 25, 2025
Vishnuvardhan in talks to direct the film 🎬 pic.twitter.com/teS3r6OmBz





















