உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ் சில இந்த ஆண்டு வெளியாக உள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்களை ஏமாற்றிய Belle Gibson பற்றிய உண்மை குற்றத்தொடர். பிப்ரவரி 6-ம் தேதி Netflix-ல் வெளியாகவுள்ளது.
மராட்டிய மன்னர் சத்ரபதி சம்பாஜி-யின் வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்பட்ட படம். பிப்ரவரி 14-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
மனித உரிமை ஆர்வலர் ஜஸ்வந்த சிங் கல்ரா, 1990-ஆம் ஆண்டு பஞ்சாபில் மனித உரிமைக்காக போராடியதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.
உஸ்மா அஹமது எனும் இந்திய பெண்ணை பாகிஸ்தானில் வசிக்கும் ஒரு ஆணுக்கு திருமணம் செய்ய வற்புறுத்தப்பட்டதை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். மார்ச் 7-ம் தேதி வெளியாக உள்ளது.
1950களில் வாழ்ந்த இத்தாலிய-அமெரிக்க கேங்ஸ்டர்ஸ், விட்டோ ஜெனோவேஸ் மற்றும் ஃபிராங்க் காஸ்டெல்லோ பற்றிய கதை. மார்ச் 21-ம் தேதி வெளியாகவுள்ளது.
17-ம் நூற்றாண்டில் கோகினூர் வைரத்தை திருட முகலாய சாம்ராஜ்யத்திற்கு செல்லும் வீர மல்லுவின் கதை. மார்ச் 28-ம் தேதி வெளியாக உள்ளது.
அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈராக் போரில் சண்டையிடச் சென்றபோது அவர்களின் அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். ஏப்ரல் 11-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
1962 இந்திய-சீன போரின் போது நடந்த ரெசாங் லா யுத்தத்தை விவரிக்கிறது இத்திரைப்படம். நவம்பர் 21-ம் தேதி வெளியாக உள்ளது.