மேலும் அறிய

Actor Ajith photos | ஒரு கையில் ஹெல்மெட்.. மறு கையில் தேசியக்கொடி.. வாகா எல்லையில் தல அஜித்! ஃபோட்டோஸ் உள்ளே..

பைக் ரைட் செய்த அஜித் வாகா எல்லைக்கு சென்று புகைப்படம் எடுத்துள்ளார்.

தமிழ் சினிமா துவங்கிய காலத்திலிருந்தே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு நடிகர் கொண்டாடப்படுவது இங்கு இயல்பே. ஆனால் ஒருவர் மட்டும் தன்னைச் சுற்றி நடக்கும் கொண்டாட்டங்களை கண்டுகொள்ளாமல் தன் பணியையும், தன் கடமையையும் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார் என்றால் அது தான் அவருக்கான அடையாளம்.  வெளியிடங்களில் தலைகாட்டுவதில்லை, பட விழாக்களுக்கு வருவதில்லை, சோஷியல் மீடியாவுக்கு நோ என தான் உண்டு தன் வேலை உண்டு என பயணித்தாலும் அவ்வப்போது இந்திய அளவில் அடிக்கடி வைரலாவார் அஜித். திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல், புகைப்படக்கலைஞர், துப்பாக்கிச் சுடுதல், கார் ரேஸ், பைக் ரேஸ், சைக்கிள் ரைடு, பைக் ரைடு, ட்ரோன் தொழில்நுட்பத்தில் ஆர்வம் என தனக்கு பிடித்ததை ஆர்வமுடன் செய்வதில் அஜித்துக்கு நிகர் அவரே. அந்த வகையில் தற்போது பைக்கிலேயே உலகைச் சுற்ற தீவிரமாக முயற்சி செய்து வருகிறார் அஜித்.


Actor Ajith photos | ஒரு கையில் ஹெல்மெட்.. மறு கையில் தேசியக்கொடி.. வாகா எல்லையில் தல அஜித்! ஃபோட்டோஸ் உள்ளே..

இந்நிலையில் இப்போது இந்திய பாகிஸ்தான் எல்லையான வாகாவில் கையில் தேசியக் கொடியுடன் அஜித் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பைக் ரைட் செய்த அஜித் வாகா எல்லைக்கு சென்று புகைப்படம் எடுத்துள்ளார். அங்குள்ள ராணுவ வீரருடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய போட்டோவும் வைரலாகி வருகிறது.

முன்னதாக, 'வலிமை' பட ஷூட்டிங்கிற்காக ரஷ்யா சென்ற அஜித், அங்குள்ள பைக் ரேஸர்களுடன் சேர்ந்து சுமார் 5000 கிலோ மீட்டர் பைக் பயணம் மேற்கொண்டார். பின்னர், சென்னை வந்த அஜித் சில நாட்கள் குடும்பத்தினருடன் இருந்துவிட்டு மீண்டும் தன்னுடைய சாகசங்களை கையில் எடுத்துள்ளார். பின்னர் டெல்லி சென்றுள்ள நடிகர் அஜித், அங்கு தாஜ்மஹாலை ரசித்ததுடன் அல்லாமல், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது சமூகவலைதளங்களில் வைரலானது.


Actor Ajith photos | ஒரு கையில் ஹெல்மெட்.. மறு கையில் தேசியக்கொடி.. வாகா எல்லையில் தல அஜித்! ஃபோட்டோஸ் உள்ளே..

இந்த பயணத்தின் போது, சாகச பெண்மணி ஒருவரை சந்தித்தார் அஜித். உலகம் முழுக்க பைக்கிலேயே சுற்றி வந்த சாகசப் பெண்மணியான மாரல் யாசர்லூவை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் நடிகர் அஜித். மேலும் , எதிர்காலத்தில் பைக்கில் உலக பயணம் மேற்கொள்ள தேவையான ஆலோசனையும் கேட்டறிந்தார். டெல்லியில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. வெளியான தகவலின்படி, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா போன்ற இடங்களில் பைக் ட்ரிப் செல்ல நடிகர் அஜித்குமார் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தான் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அஜித் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
Jailer 2 : 15 லட்சம் டிக்கெட்கள் விற்பனை...ரிலீஸ் முன்பே 100 கோடி வசூலை நெருங்கும் ஜெயிலர் 2
Jailer 2 : 15 லட்சம் டிக்கெட்கள் விற்பனை...ரிலீஸ் முன்பே 100 கோடி வசூலை நெருங்கும் ஜெயிலர் 2

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget