Ajith Kumar: பத்ம பூசண் விருது; சென்னை திரும்பிய அஜித் குமார் சொன்ன முதல் வார்த்தை!
Ajith Kumar: பத்ம பூசண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

பத்ம பூசண் விருது பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.
பத்ம விருதுகள்
2025-ம் ஆண்டிற்கான இந்தியாவின் உயரிய விருதுகளான பதம் ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. பத்ம விபூஷன் விருது 7 நபர்களுக்கும் , பத்ம பூச விருது 19 நபர்களுக்கும், பத்ம ஸ்ரீ விருது 113 நபர்களுக்கும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரத்தை காணலாம்.
நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூசண் விருது
நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரவுபதி முரிமுவிடம் நடிகர் அஜித் குமார் விருதினைப் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி பயணத்திற்கு பிறகு, சென்னை திரும்பிய நடிகர் அஜித் குமார் விமான நிலையத்தில் பேசியபோது, பத்ம பூசண் விருது பெற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அஜித் குமார் தெரிவித்தார்.
I’ll Be Meeting The Press Very Soon! 🥵🔥🔜
— AJITHKUMAR FANS CLUB 👑 (@ThalaAjith_FC) April 29, 2025
- Says #Ajithkumar pic.twitter.com/6DupTmGHtF
அஜித் குமார் பத்ம பூசண் விருது பெற்றது குறித்து அவரது மனைவி ஷாலினி தெரிவிக்கையில்,” மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு.” என்று தெரிவித்தார். அஜித் குமார் விரைவில் பத்திரிகையாளர்களைச் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.






















