மேலும் அறிய

என்ன கெட்டவனா காட்டுனாங்க...தேர்தலின்போது சர்ச்சை வீடியோ குறித்து நடிகர் அஜித் விளக்கம்

நடிகர் அஜித் வாக்களிக்க வந்த போது இளைஞரிடம் இருந்து செல்ஃபோனை பறித்து வைத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது குறித்து அஜித் விளக்கமளித்துள்ளார்

தி ஹாலிவுட் ரிப்போர்டருக்கு அளித்த பேட்டியில் ஒரு பிரபலமாக தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் , மோட்டர் ஸ்போர்ட்ஸ் , கரூர் விபத்து உட்பட பல்வேறு விஷயங்களைப் பற்றி அஜித் பேசியுள்ளார். தனது வீடியோ ஒன்றை வைரலாகி அதை வைத்து தன்னை கெட்டவனாக ஊடகங்கள் சித்தரித்ததாக அஜித் கூறியுள்ளார். 

இளைஞரிடம் செல்ஃபோனை பறித்த வீடியோ பற்றி அஜித் 

" ஒரு பிரபலமாக இருப்பதால் என்னால் என் குடும்பத்துடன் போதுமான நேரத்தை செலவிட முடிவதில்லை. என் குழந்தைகளை பள்ளியில் விட சென்றால் அங்கு கூட்டம் கூடுகிறது. ரசிகர்கள் உங்களை பார்க்க திரள்கிறார்கள். அதிக கூட்டம் சேர்வதால் பள்ளி நிர்வாகமே என்னை கிளம்ப சொல்லியிருக்கிறது. குடும்பத்துடன் வெளியே சென்றால் நான் காரை ஓட்டிச் செல்வதைப் பார்த்து வண்டியில் ரசிகர்கள் திரள்கிறார்கள். இதனால் அவர்களுக்கும் அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள். அதிலும் சிலர் கார் முன்பு வண்டியை நிறுத்து நான் அவர்களுடன் செல்ஃபீ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒரு ரசிகர் அப்படி தனது அன்பை வெளிப்படுத்துகையில் அதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று எனக்கு தெரியவில்லை.  என்னை மற்ற தந்தைகளைப் போல் இருக்கச் சொல்லி என் குழந்தைகள் என்னிடம் அழுதிருக்கிறார்கள். ஆனால் இந்த சவால்களை கடந்து என்னால் என் குடும்பத்துடன்  நிம்மதியாக இருக்க முடியவில்லை. 

பொது நாகரிகம் எல்லாரும் பின்பற்ற வேண்டும் 

இதேபோல் ஒருமுறை தேர்தலின்போது நான் வாக்களிக்கச் சென்றிருந்தேன். அங்கு ஒரு இளைஞர் செல்ஃபோனில் ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்.  அந்த இடத்தில் செல்போன் பயன்படுத்தக்கூடாது அப்படி மீறினால் அபராதம் விதிக்கப்பட்டும் என்று தெளிவாக எழுதியிருந்தது. நான் முதலில் பத்திரிகையாளர்களிடம் பொறுமையாக சொன்னேன். பின் கோபமாகி  அந்த இளைஞரிடம் இருந்து செல்ஃபோனை பறித்து வைத்தேன். உடனே இதை ஊடகங்கள் என்னை கெட்டவனாக சித்தரிக்கத் தொடங்கினார்கள். இதனால் அந்த இளைஞனும் தன்னை பாதிக்கப்பட்டவனாக உணர்கிறார். அவன் செய்தது சரியென்று நம்புகிறார். அங்கிருந்த பத்திரிகையாளர்களில் யாரும் அங்கு சுற்றி என்ன எழுதியிருந்தது என்பதை காட்டவில்லை. நிறைய பேர் என்னை விமர்சித்தார்கள். என்னைப் பொறுத்தவரை பொது வெளியில் நாகரிகமாக நடந்துக்கொள்வது என்பது எல்லாருக்கும் பொதுவானது. அது ஒரு சாமானியனாக இருந்தாலும் சரி , பத்திர்கையாளர் அல்லது பிரபலமாக இருந்தாலும் சரி." என அஜித் கூறினார். 

 

தலைப்பு செய்திகள்

4 நாட்களில் ரூ.51 கோடியை கடந்த ‘மீசைய முறுக்கு 2’ வசூல்.. ஹிப்ஹாப் தமிழாவுக்கு கம்பேக்!
4 நாட்களில் ரூ.51 கோடியை கடந்த ‘மீசைய முறுக்கு 2’ வசூல்.. ஹிப்ஹாப் தமிழாவுக்கு கம்பேக்!
அண்ணாத்த, பீஸ்ட் வரிசையில் ஜெயிலர் 2? ஆடியோ லாஞ்ச் இல்லாதது ஏன்?
அண்ணாத்த, பீஸ்ட் வரிசையில் ஜெயிலர் 2? ஆடியோ லாஞ்ச் இல்லாதது ஏன்?
சம்பளமே இல்லாமல் டேர்டெவில் படப்பிடிப்பை தொடங்கும் அஜித் குமார்..என்ன காரணம்?
சம்பளமே இல்லாமல் டேர்டெவில் படப்பிடிப்பை தொடங்கும் அஜித் குமார்..என்ன காரணம்?
“சார், நாம குடும்பம்” - வெங்கட் பிரபுவுக்கு சிவகார்த்திகேயன் பதில்
“சார், நாம குடும்பம்” - வெங்கட் பிரபுவுக்கு சிவகார்த்திகேயன் பதில்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
ரீல்ஸ் மதுமிதா வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது ஏன்.? இது தான் காரணம்- திருடர்கள் பகீர் வாக்குமூலம்
ரீல்ஸ் மதுமிதா வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது ஏன்.? இது தான் காரணம்- திருடர்கள் பகீர் வாக்குமூலம்
Kolathur Market: ஸ்டாலின் பார்த்து பார்த்து கட்டிய வர்த்தக மையத்திற்கு மூடு விழா..! ரூ.53 கோடி வீணா? வசதிகள் எங்கே?
ஸ்டாலின் பார்த்து பார்த்து கட்டிய வர்த்தக மையத்திற்கு மூடு விழா..! ரூ.53 கோடி வீணா? வசதிகள் எங்கே?
சொத்து வரி செலுத்த நாளை தான் Last Date.! மறந்துடாதீங்க- வீட்டில் இருந்தே ஈசியாக கட்ட வழிமுறை இதோ
சொத்து வரி செலுத்த நாளை தான் Last Date.! மறந்துடாதீங்க- வீட்டில் இருந்தே ஈசியாக கட்ட வழிமுறை இதோ..
Free Bicycle Scheme : பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.! ஸ்டைலான இலவச சைக்கிள் - என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்போது கிடைக்கும்?
பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.! ஸ்டைலான இலவச சைக்கிள் - என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்போது கிடைக்கும்?
TN Weather News: இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TASMAC Shop Holiday : வரும் வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு வந்த ஷாக் நியூஸ்
வரும் வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு வந்த ஷாக் நியூஸ்
Gold rate today : சவரனுக்கு 2,880 ரூபாய் சரிந்தது.! வெறும் 2 நாளில் தலைகீழாக மாறிய தங்கம் விலை- இன்றைய விலை இதோ...
சவரனுக்கு 2,880 ரூபாய் சரிந்தது.! வெறும் 2 நாளில் தலைகீழாக மாறிய தங்கம் விலை- இன்றைய விலை இதோ...
Embed widget