மேலும் அறிய

Kashmir Files Production Next: வரலாற்றில் மறைக்கப்பட்ட இரு கொடூர சம்பவங்கள்.. காஷ்மீர் ஃபைல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படைப்புகள் இதுதான்..!

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

மனித குலத்தில் கொடூரமான முறையில் நடைபெற்று வரலாற்றில் மறைக்கப்பட்ட இரண்டு உண்மை சம்பவங்களை மையப்படுத்தி, இரண்டு திரைப்படங்களை தயாரிப்பதற்காக 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பட தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் நிறுவனமும், ஐ அம் புத்தா புரொடக்சன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனமும் ஒன்றிணைகின்றன.

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தினை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் ஐ அம் புத்தா புரொடக்ஷன்ஸ் எனும் இரண்டு நிறுவனங்களும் இணைந்து வழங்கின. இந்தப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மேலும் இரண்டு நேர்மையான கதைகளை சொல்ல இவ்விரண்டு பட தயாரிப்பு நிறுவனங்களும் மீண்டும் ஒன்றிணைந்திருக்கிறது.

இந்த இரண்டு நிறுவனங்களின் கூட்டணியில் தொடங்கப்பட்ட 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் வெளியான பிறகு இந்தியா முழுவதும் விவாதத்திற்குரிய பேசுபொருளாக மாறியது. 1990களில் காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை இதயத்தை அதிரச் செய்யும் வகையில் இதன் கதை அமைந்திருந்தது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள்,  நேர்த்தியான பாணியில் விவரிக்கப்பட்ட திரைக்கதை, ஆகியவை குறித்து இன்றும் போதுமான அளவில் விவாதங்கள் தொடர்கிறது. இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் மற்றும் நடிகை பல்லவி ஜோஷி ஆகியோர் இதன் மூன்று பாகங்களையும் நிறைவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

250 கோடி ரூபாய் வசூலித்து 'வசூல் கிளப்'பில் இணைந்திருக்கும் ' தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரையுலக வணிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் இப்படத்தை பாராட்டியிருக்கின்றனர். இதனால் இந்த கூட்டணியின் அடுத்த பட அறிவிப்பிற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

தேஜ் நாராயன் அகர்வால் வழங்க, அபிஷேக் அகர்வால், விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி மற்றும் பல்லவி ஜோஷி ஆகியோர் இந்த இரண்டு படங்களையும் தயாரிக்கின்றனர். தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை மையமாகக் கொண்டு வெளியாகவிருக்கும் இரண்டு படங்கள் தொடர்பான கூடுதல் விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வெளியாகி பல்வேறு கண்டனங்களையும் சம்பாரித்தது. உண்மைக்கு புறம்பாக பல காட்சிகள் இருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் அடுத்த படைப்புகள் குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வரப்போகும் படைப்புகள் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Vijay interview : ரசிகர்கள் விருப்பப்பட்டால் தளபதி டூ தலைவன்... நேர்காணலில் அரசியல் முடிச்சை அவிழ்த்த விஜய்!!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 
ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget