க்யூட்டா இருந்தது குத்தமாடா...லட்சம் ஃபாலோவர்ஸ்...சி.எஸ்.கே மேட்சில் வைரலான பெண்
ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் மோதிய ஐ.பி.எல் மேட்சில் சி.எஸ்கே ரசிகை ஒருவர் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளார்

சி.எஸ்.கே - ராஜஸ்தான் போட்டி
2025 ஐ.பி.எல் போட்டி கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் மார்ச் 30 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் முதலில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில், சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில், 182 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியில், அபாரமாக செயல்பட்ட கேப்டன் ருதுராஜ் 63 ரன்களை குவித்தார். ஆனால், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்ததால், 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. சென்னை அணி தொடர்ச்சியாக 2வது போட்டியில் தோல்வி கண்டுள்ளது. இதனால் சி.எஸ்.கே ரசிகர்கள் தங்கள் அதிருபதியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
வைரலான சி.எஸ்.கே ரசிகை
ஐ.பி.எல் வந்தாலே போட்டியை பார்க்க வரும் அழகான பெண்களை கேமராமேன்கள் ஃபோகஸ் செய்வார்கள். அந்த வகையில் இந்த முறை சி.எஸ்.கே ரசிகை ஒருவர் வைரலாகியுள்ளார். ராஜஸ்தான் உடனான போட்டியில் தோனியின் விக்கெட் விழ கோபத்தில் அந்த பெண் திட்டுவதற்கு போய் பின் சந்தானம் ஸ்டைலில் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலனாது. இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் இஸ்டாகிராம் ஐடி யை கண்டுபிடித்து சமூக வலைதளத்தில் நெட்டிசன் வெளியிட்டுள்ளார். சில நூறு ஃபாலோவர்களை வைத்திருந்த அந்த பெண்ணில் இன்ஸ்டாகிராம் ஐடியை ஓவர்னைட்டில் ஒன்றரை லட்சம் பேர் ஃபாலோ கொடுத்துள்ளார்கள்.
தொலைக்காட்சியில் சில நொடிகள் வந்த ஒரு பெண்ணை ஓவர் நைட்டில் இத்தனை பேர் ஃபாலோ செய்கிறார்கள். இந்த நாட்டை யாருமே காப்பாத்த முடியாது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகிறார்கள்.





















