Jailer update: பாக்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த.. ஜெயிலர் லுக் டெஸ்ட்.. வைரலாகும் போட்டோ..!
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. ரஜினிகாந்தின் 169 ஆவது படமான இதை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்குவது அனைவரும் அறிந்ததே. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்தப்படத்தின் டெஸ்ட் ஷூட் அண்மையில் நடந்ததாகத் தெரிகிறது.
View this post on Instagram
இது குறித்து பிரபல ஹேர் ஸ்டைல் வடிவமைப்பாளரான ஆலீம் ஹக்கீம் (Aalim Hakim) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, “ ரஜினிகாந்துடன் வேலை பார்த்த இந்த நாள் புதுமையாக இருந்தது என்று பதிவிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படத்தை பலரும் தங்களது சமூகவலைதளங்களில் ஷேர் செய்து, நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
‘பீஸ்ட்’ -ன் படுதோல்விக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் நெல்சனுக்கு இதில் வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்கிற பிரஷ்ஷர். அதனால் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக எடுத்து வைத்து வருகிறார் நெல்சன்.
ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பதை அவரே உறுதிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்காமோகன், ரம்யா கிருஷ்ணன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளாமே நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாகவும், பிரியங்கா மோகன் முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, மேடை ஒன்றில் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறோம் நெல்சன் கூறியிருந்தார். இந்த நிலையில் ஜெயிலர் படத்திற்கு முந்தைய வேலைகள் கிட்டத்தட்ட முழுமையாக முடிந்து விட்டதாம். வருகிற ஆக்ஸ்ட் 3 ஆம் தேதி படத்தின் பூஜையை படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம்.