Partner Movie Trailer: இது புதுசால இருக்கு... ஹன்சிகாவாக மாறிய யோகிபாபு... பாட்னர் படத்தின் டிரைலர் ரிலீஸ்..!
ஆதி, ஹன்சிகா மோத்வானி மற்றும் யோகிபாபு நடிப்பிள் உருவாகியிருக்கும் பட்னர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது
மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகி ஆதி, யோகிபாபு ஹன்சிகா ஆகியவர்கள் நடித்திருக்கும் பாட்னர் திரைப்பட்த்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.
பாட்னர்
கோலி சூர்யா பிரகாஷ் தயாரித்து மனோஜ் தாமோதரன் இயக்கியிருக்கும் படம் பாட்னர். ஆதி பினிஷெட்டி , ஹன்சிகா மோத்வானி , யோகி பாபு ஆகியவர்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஷபீர் அஹமத் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பாட்னர் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது.
பாட்னர் டிரைலர்
பணத்தேவையில் தனது நண்பரான யோகி பாபுவை தேடி வருகிறார் ஆதி. டி.சி.எஸ் இல் தான் வேலை பார்ப்பதாக கூறும் யோகிபாபு தொழில்நுட்ப பொருட்களை திருடி விற்கும் வேலையை செய்து வருகிறார். பணத்திற்காக யோகிபாபுவுடன் சேர்ந்து ஒரு சைண்டிஸ்ட்டிடம் இருக்கும் ஒரு பொருளை திருடசெல்லும்போது அங்கு இருக்கும் ஒரு மிஷினால் பெண்ணாக மாறிவிடுகிறார் யோகி பாபு.
அதுவும் யாராக, ஹன்சிகா மோத்வானியாக மாறிவிடுகிறார். மீண்டும் அந்த சைண்டிஸ்ட்டை கண்டுபிடித்து இந்த நிலையை சரிசெய்வதே மீதிக்கதையாக இருக்கும் என்கிற வகையில் அமைந்திருக்கிறது பாட்னர் படத்தின் டிரைலர்
ஹன்சிகா மோத்வானி
ஹன்சிகா கடைசியாக தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபுதேவாவுடன் குலேபகாவலி படத்திலும் மற்றும் 100 என்கிற படத்திலும் நடித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் தோன்ற இருக்கும் ஹன்சிகா மோத்வானி இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. மேலும் எல்லா நடிகர்களையும் போல் காமெடி திரைப்படங்கள் ஹன்சிகாவிற்கு எப்போதும் கைகொடுத்திருக்கின்றன.
ஆதி
ஹன்சிகா மட்டுமில்லை நடிகர் ஆதியும் நீண்ட நாட்கள் கழித்து இந்த படத்தின் மூலமாக கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஆதி நடித்த மரகதநாணயம் திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதற்கடுத்து க்ளாப் , வாரியர் ஆகியப் படங்களில் நடித்தார் ஆதி. ஆனால் அந்தப் படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை. தற்போது பாட்னர் திரைப்படம் ஹன்சிகா மற்றும் ஆதி ஆகிய இருவ்ருக்கும் ஒரு கம்பேக் திரைப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
யோகிபாபு
ஒரு படத்தில் கதாநாயகன் கதாநாயகி இருக்கிறார்களோ இல்லையோ யோகி பாபு இருந்தாலே போதுமானது. ஹீரோ, ஹீரோயின் , காமெடியன் , வில்லன் என எல்லா கதாபாத்திரங்களையும் அவரே பார்த்துவிடும் அளவிற்கு அவருக்கு டிமாண்ட் இருந்து வருகிறது. பாட்னர் திரைப்படத்தில் ஹீரோவின் நண்பனாக வரும் யோகிபாபு அனேகமாக படத்தின் தொடக்கத்திலும் பட்த்தின் இறுதியில் மட்டுமே வருவார் என்று எதிர்பார்க்கலாம். காரணம் அவர்தான் ஹன்சிகாவாக மாறிவிடுகிறாரே?