இந்த சீரியல் நடிகைக்கு பெரிய கெளரவம்.. ரஹ்மானே ஃபாலோயிங்.. ஹார்டீன் விடும் நெட்டிசன்கள்..
இவர் கடந்த ஆண்டு மே மாதத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியது.
சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சுந்தரி. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் கேப்ரில்லா. டிக் டாக் செயலி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் கிராமத்து பெண் போன்ற தொனியில் பேசி ரசிகர்களின் மனதை பெரிதும் கவர்ந்தார். டிக் டாக் வீடியோ மூலம் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய கேப்ரியல்லா, கடந்த 2016-ம் ஆண்டு தனது முதல் அரங்கேற்றத்தை தொடங்கினார். அந்த வரும் நடைபெற்ற கலக்கப்போவது யார் என்ற ஷோவில் பங்கேற்ற இவர், தனது காமெடி திறமையை வெளிப்படுத்தினார்.
ஆனால் அந்நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றுக்கு முன்பே வெளியேற்றப்பட்டார். அதற்கடுத்து சினிமாவில் வாய்ப்பு தேடிய அவருக்குச்சென்ற இடமெல்லாம் ஏமாற்றமே மிஞ்சியது. இதில் பல இடங்களில் அவரின் நிறமே அவருக்கு எதிரி என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளனர்.
View this post on Instagram
படிப்படியாக வளர்ந்து தற்போது சீரியல் நடிகையாக இடம் பிடித்துள்ளார். சுந்தரி என்னும் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் கேப்ரில்லா மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலம் ஆகி இருக்கிறார். கருப்பு நிறத்தை வைத்து ஒதுக்கப்படும் பெண் கதாப்பதிரத்தை மையப்படுத்திய இந்த சீரியல் குடும்பத்தார் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இவரது மாநிறத்திற்கே ரசிகர்கள் அதிகம். தற்போது குடும்பங்களும் இவரது அழகை ரசிக்க தொடங்கியுள்ளனர். இந்த சீரியல் தற்போதய இளைஞர்களுக்கு கிரிஞ்சாக தோன்றினாலும், இதனை ரசிக்கும் பெரியவர்கள் மத்தியில் கருப்பு நிறம் இழிவல்ல எனும் பதத்தை நிலைநிறுத்ததான் முற்படுகிறது. பட படவென பேசும் திறனாலும் முகபாவனைகளாலும் ரசிகர்களை கவர்ந்த கேப்ரில்லாவின் நடிப்பால் சுந்தரி நாடகம் TRP உச்சத்தை தொட்டுள்ளது.
View this post on Instagram
இந்நிலையில், சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் 6.1 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நடிகை கேப்ரியல்லாவை (ஃபாலோ செய்துள்ளார்) பின்தொடர்ந்துள்ளர். இதை உறுதிப்படுத்தியுள்ள கேப்ரியல்லா, “இது ரொம்ப பெரிய விஷயம் சார். இதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார். இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் மொத்தமே 64 பேரைத்தான் பாலோ செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சுந்தரி சீரியலில் பிசியாக நடித்து வரும் நடிகை கேப்ரியல்லா கடந்த ஆண்டு மே மாதத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியது. ‘முப்பில்லா தமிழே தாயே'(Moopilla Thamizhe Thaaye) என்ற பாடலுக்காக தன்னுடன் கேப்ரியல்லா பணியாற்றியுள்ளதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.