Madharasi Trailer : முழு ஆக்ஷன் அவதாரமெடுத்த சிவகார்த்திகேயன்... மதராஸி பட டிரெய்லர் விமர்சனம்
Madharasi Trailer : ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனமீர்த்துள்ளது

மதராஸி டிரெய்லர்
ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் மதராஸி. ருக்மினி வசந்த் , பிஜூ மேனன் , விக்ராந்த் , வித்யுத் ஜம்வால் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி மதராஸி திரைப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில் இன்று சென்னையில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்து வருகிறது. இந்த நிகழ்வில் மதராஸி படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
Brace yourself for the EMOTIONAL RIDE & the ACTION EXPLOSION 💥💥💥
— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) August 24, 2025
The massive #MadharaasiTrailer is out now ⚡
Tamil : https://t.co/M7VPPx77kO
Telugu : https://t.co/HB2B7BICBo
Hindi : https://t.co/pPgyYVdG3a
Kannada : https://t.co/Lwx8lxew8T
Malayalam : https://t.co/lTaM8JSUH9… pic.twitter.com/IpFqvBrZ4E
மதராஸி டிரெய்லர் ரிவியு
சிவகார்த்திகேயனின் முந்தைய படம் அமரனைக் காட்டிலும் மதராஸி படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். வட மாநிலத்தில் இருந்து ஆயுதங்களை கடத்தி வருகிறது வில்லன் வித்யுத் ஜம்வாலின் கும்பல். இதனை தமிழ்நாடு போலீஸ் தடுக்க முயற்சிக்கிறது. மறுபக்கம் ருக்மினியை காதலித்து டூயட் பாடிக் கொண்டிருக்கிறார் நாயகன் சிவகார்த்திகேயன். நாயகி ருக்மினி இந்த கடத்தல் கும்பலிடம் எப்படி சிக்கினார் . அவரை நாயகன் சிவகார்த்திகேயன் எப்படி காப்பாற்றினார் என்பது இப்படத்தின் கதையாக இருக்கும் என டிரெய்லரை வைத்து சொல்லலாம். துப்பாக்கி படத்தில் வில்லனாக மிரட்டிய வித்யுத் ஜம்வால் இப்படத்தில் ஒரு படி மேலே சென்று ஸ்டண்ட் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். மறுபக்கம் அவருக்கு ஆக்ஷன் காட்சியில் சவால் விடுகிறார் சிவகார்த்திகேயன். அனிருத்தின் பின்னணி இசை வேற லெவல். பீஜூ மேனன் , விக்ராந்த் ஆகியவர்களின் கதாபாத்திரங்களுக்கு படத்தில் முக்கிய பங்கு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஹைப் ஏற்றிய மதராஸி
மதராஸி படம் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கு பெரியளவில் ப்ரோமோஷன்கள் தொடங்கபடாமல் இருந்ததை ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் பெரிய பில்டப் கொடுக்காமல் டிரெய்லரை வெளியிட்டு படத்திற்கு ஹைட் உருவாக்கியுள்ளது படக்குழு. இந்த டிரெய்லர் வெளியான பின் படத்திற்கு பல மடங்கு ஹைப் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.





















