இனிமேல் கார் பார்க்கிங்கிற்கு இந்த சான்றிதழ் தேவையா?

Published by: ABP NADU
Image Source: Pixabay

சென்னையில் புதிய கார் வாங்க, பார்க்கிங் இடம் அவசியம். புதிய கொள்கை விரைவில் அமலுக்கு வருகிறது

Image Source: Pixabay

சென்னையில் பெருகி வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Image Source: Pixabay

புதிய கார் பதிவு செய்யும்போது பார்க்கிங் இடத்திற்கான சான்றிதழ் அல்லது வாடகை ஒப்பந்தம் சமர்ப்பிக்க வேண்டும்.

சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதே இந்த கொள்கையின் முக்கிய நோக்கம்.

சொந்தமாக பார்க்கிங் இடம் இல்லாதவர்கள் வாடகை பார்க்கிங் ஒப்பந்தம் சமர்ப்பிக்கலாம்.

இந்த புதிய விதி விரைவில் அரசு போக்குவரத்து துறையால் அமல்படுத்தப்பட உள்ளது.

பார்க்கிங் வசதி இல்லாததால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இது ஒரு தீர்வாக அமையும் என போக்குவரத்துத்துறை கூறுகிறது

புதிய கொள்கையின் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

இது ஒரு ஆரம்பகட்ட முயற்சி. எதிர்காலத்தில் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்யப்படலாம்.