Viral Varisu Review : இதுக்கு இவ்வளவு பட்ஜெட் தேவையா? பெண்கள் அடங்கி போக வேண்டும்...மாடர்னாக சொல்லப்பட்ட 'வாரிசு' கதை... வைரலாகும் பெண்ணின் விமர்சனம்
பெண்கள் வீட்டில் நடக்கும் அநியாயங்களை எல்லாம் பொறுத்து கொண்டு போக வேண்டும் என மார்டனாக வாரிசு படத்தில் சொல்வது தப்பான விஷயம் - வைரலாகும் பெண்ணின் விமர்சனம்

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஜனவரி 11ம் தேதி வெளியான திரைப்படம் 'வாரிசு'. குடும்ப சென்டிமென்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா மற்றும் பலர் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை குவித்து வருகிறது.
தமிழ்நாட்டில் முன்னிலை :
உலகளவில் 26.5 கோடி வசூலித்த வாரிசு திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே 17 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டில் வசூலில் சாதனை படைத்து வரும் வாரிசு திரைப்படத்தின் இந்த முன்னணி நிலை இன்னும் கொஞ்ச காலங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#varisu took the lead in TN from the previous day 🔥
— Filmy Kollywud (@FilmyKollywud) January 13, 2023
Looks like the rage is gonna sustain for many weeks 🔥@actorvijay sheer dominance over the centres pic.twitter.com/RFjq3TSPAK
ரசிகர்கள் பலரும் கலவையான விமர்சனங்களை குவித்து வரும் நிலையில் நடுத்தர வயது கொண்ட ஒரு பெண் வாரிசு படம் குறித்து வெளியிட்ட விமர்சனம் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
வைரலாக பெண்ணின் விமர்சனம் :
"குடும்பம் முக்கியம் தான் என்றாலும் பெண்கள் வீட்டில் நடக்கும் அநியாயங்களை எல்லாம் பொறுத்து கொண்டு போக வேண்டும் என எந்த ஒரு அவசியமும் இல்லை. பெண்களுக்கு நடக்கும் அனைத்து அநியாயங்களையும் பொறுத்து கொண்டு போக வேண்டும் என்பதை மார்டனாக இப்படத்தில் சொல்லி இருக்கிறார்கள். அது ரொம்ப தப்பான விஷயம். அதிலும் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் குழந்தைக்காகவும், குடும்பத்திற்காகவும் பொறுத்து கொள்ள வேண்டும் என்பது ஆதி காலத்து வேல்யூ.
இன்றைய தலைமுறையில் ஏராளமானவை மாறிவிட்டன. ஆனால் இப்படத்தில் பழைய சென்டிமென்டை புகுத்தி இருக்கிறார்கள். குடும்பம் என்பது ஜனநாயகமாக இருக்கு வேண்டும். ஆனால் ஏனோ படங்கள் அதை பற்றி பேசாமல் பொறுத்து போக வேண்டும் என்றே சொல்லி வருகிறார்கள். இதை சொல்வதற்கு இவ்வளவு பட்ஜெட்டில் படம் எடுக்க தேவையே இல்லை என்றார் அந்த பெண். அவரின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

