மேலும் அறிய

Malayalam Cinema: 3 மாதங்களில் ரூ.100 கோடி வசூலித்த 4 மலையாள படங்கள்.. தடுமாறுகிறதா தமிழ் சினிமா?

தற்காலங்களில் ரூ.100 கோடி வசூலிப்பது சாதாரண விஷயம் என குறிப்பிடப்பட்டாலும், முன்னணி நடிகர்கள் இல்லாமல் இளம் நடிகர்கள் நடித்த படங்கள் ரூ.100 கோடி வசூலித்திருப்பது தான் அங்கு பேசுபொருளாக மாறியுள்ளது.

மலையாளத்தில் வெளியான நடிகர் ஃபஹத் ஃபாசிலின் “ஆவேஷம்” படம் ரூ.100 கோடி வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. 

மலையாள சினிமாவுலகில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ரோமஞ்சம் படத்தை இயக்கியவர் ஜித்து மாதவன். இவர் அடுத்தாக ஃபஹத் ஃபாசிலை வைத்து “ஆவேஷம்” என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகியது. ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற இப்படம் வசூலை வாரிக்குவித்தது. சுஷின் ஷ்யாம் இசையமைத்த இப்படத்தை  ஃபஹத் ஃபாசில் அண்ட் ஃப்ரெண்ட்ஸ் மற்றும் அன்வர் ரஷீத் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது. 

ஆவேஷம் படம் 14 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. இது மலையாள சினிமாவுலகில் மகத்தான சாதனையாக பார்க்கப்படுகிறது. தற்காலங்களில் ரூ.100 கோடி வசூலிப்பது சாதாரண விஷயம் என குறிப்பிடப்பட்டாலும், முன்னணி நடிகர்கள் இல்லாமல் இளம் நடிகர்கள் நடித்த படங்கள் ரூ.100 கோடி வசூலித்திருப்பது தான் அங்கு பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான பிரேமலு மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் ஆகிய இரண்டு திரைப்படங்களும் தாறுமாறாக வசூலை ஈட்டியது. 

தொடர்ந்து மார்ச் மாதம் வெளியான பிரித்விராஜ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய ஆடுஜீவிதம் படம் ரூ.100 கோடியை அள்ளியது. இந்நிலையில் தற்போது ஃபஹத் ஃபாசில் நடித்த “ஆவேஷம்” படமும் ரூ.100 கோடி வசூலை பெற்றுள்ளது பிற திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தடுமாறுகிறதா தமிழ் சினிமா?

இப்படியான நிலையில் எப்போதும் தரமான படங்களை வழங்கும் தமிழ் சினிமா தடம் மாறி வருகிறதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஏற்கனவே ரீ-ரிலீஸ் படங்கள் கல்லா கட்டி வரும் நிலையில், மறுபக்கம் முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இன்னொரு பக்கம் சிறிய பட்ஜெட் படங்கள் தரமான கதையாக இருந்தாலும் மக்கள் தியேட்டருக்கு வராததால் காட்சிகள் கொடுக்கவே தியேட்டர்கள் தயங்குகின்றன. இவற்றுக்கெல்லாம் தீர்வே இல்லையா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழ தொடங்கியுள்ளது. 

2023 ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர், விஜய் நடித்த லியோ ஆகிய 2 படங்கள் ரூ.600 கோடி வசூலை ஈட்டி மகத்தான சாதனைப் படைத்தது. ஆனால் இந்த முறை 4 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம், ஜெயம் ரவி நடித்த சைரன் உள்ளிட்ட படங்கள் மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி விட்டது. 

இரண்டாம் பாதியில் இந்தியன் 2, தி கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம், விடா முயற்சி, வேட்டையன், அமரன், கங்குவா,ராயன், தங்கலான், விடுதலை பாகம் 2 என பல படங்கள் ரிலீசாக உள்ளது. இந்த படங்கள் ஜெயித்தால் மட்டுமே இந்தாண்டு தமிழ் சினிமா சொல்லிக்கொள்ளும்படியான நிலையில் இருக்கும். ஏற்கனவே ரீ-ரிலீஸ் படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புதிய படங்களின் வெற்றியை தடுத்து வரும் நிலையில் சரியான முறையில் ரசிகர்களை கவர படங்களும் தவறி வருவது சரியாகுமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget