Master Mahendran: மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் திரில்லர் படம்! படப்பிடிப்பை தொடங்கி வைத்த பிரபல இயக்குனர்கள்!
Master Mahendran: விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் மற்றும் ‘லேபிள்’ வெப் சீரிஸ் ஆகியவற்றில் அபார நடிப்பை வெளிப்படுத்திய மாஸ்டர் மகேந்திரன் இந்தப் படத்தில் நடிப்பில் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
![Master Mahendran: மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் திரில்லர் படம்! படப்பிடிப்பை தொடங்கி வைத்த பிரபல இயக்குனர்கள்! 4 Celebrated filmmakers of Kollywood launch SANA STUDIOS’ Production No1 starring Master Mahendran in the lead role Master Mahendran: மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் திரில்லர் படம்! படப்பிடிப்பை தொடங்கி வைத்த பிரபல இயக்குனர்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/06/4b0baeba23c136ef86dd69ed72600a851707220666148102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Master Mahendran: மாஸ்டர் மகேந்திரன் புதிதாக நடிக்கும் சர்வைவல் த்ரில்லர் படத்தின் பூஜையை சீமான், அருண்ராஜா உள்ளிட்ட நான்கு இயக்குநர்கள் தொடங்கி வைத்து வாழ்த்தினர்.
மாஸ்டர் மகேந்திரனின் புதிய படம்:
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிப்பில் பேசப்படும் நடிகராக இருப்பவர் மாஸ்டர் மகேந்திரன். இவர் புதிதாக த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில், மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை, கோலிவுட்டின் பிரபல திரைப்பட இயக்குநர்கள் 4 பேர் தொடங்கி வைத்தனர். இயக்குநரும், அரசியல்வாதியுமான சீமான், சரண், அருண்ராஜா காமராஜ் மற்றும் கல்யாண் உள்ளிட்ட கோலிவுட்டின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குநர்கள் நான்கு பேர் சனா ஸ்டுடியோஸின் முதல் தயாரிப்பு படத்தை தொடங்கி வைத்துள்ளனர். பிரம்மாண்டமாக பூஜையோடு தொடங்கிய படப்பிடிப்பு விழாவில் படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
சர்வைவல் திரில்லர்:
இதற்கு முன்பு ஸ்ரீகாந்த் நடித்த ’எக்கோ’ படத்தை இயக்கிய நவீன் கணேஷ் இந்த படத்தை இயக்குகிறார். பெயரிடப்படாத இந்த படம் சர்வைவல் த்ரில்லராக உருவாக உள்ளது. முத்து, சந்தோஷ் சிவன் மற்றும் ரவி இணைந்து மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் படத்தை தயாரிக்கின்றனர். படத்தில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்க, ஜீவிதா இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் சார்லி, கும்கி அஸ்வின், கலக்கப்போவது யாரு புகழ் சரத் மற்றும் பலர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.
இசை, எடிட்டர், கேமரா யார்?
இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-க்கு இசை ஏற்பாட்டாளராக இருந்த (arranger) அபிஷேக் ஏ.ஆர். இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதற்கு முன்பு அவரது இசையில் உருவான ‘கேம் ஆன்’ ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. படத்திற்கு ரவிவர்மா ஒளிப்பதிவு செய்கிறார். அவருடைய ஒளிப்பதிவில் சமீபத்தில் வெளியான 'தூக்குதுரை' படம் ஒளிப்பதிவுக்காக பாராட்டுகளைப் பெற்றது. ‘சிவகுமாரின் சபதம்’ மற்றும் ’ரவுடி பேபி’ படங்களுக்கு படத்தொகுப்பு செய்த தீபக் இதில் எடிட்டராக பணிபுரிகிறார்.
விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மாஸ்டர்’ படம் மற்றும் ‘லேபிள்’ வெப் சீரிஸ் ஆகியவற்றில் அபார நடிப்பை வெளிப்படுத்திய மாஸ்டர் மகேந்திரன் இந்தப் படத்தில் நடிப்பில் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வைவல் த்ரில்லராக உருவாகும் இந்த படம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Actor Manikandan: ஆஸ்கர் மேடைல பேச 10 வருஷம் முன்னாடியே ரிகர்சல் செய்தேன்: மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்யம்!
Vijay: நாளைய தீர்ப்பு முதல் கோட் வரை: செம ஃபிட்டாக வலம் வரும் விஜய்யின் ஃபிட்னெஸ் ரகசியம் தெரியுமா?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)