Kiran Rathod: கையில் சிகரெட்.. இன்ஸ்டாவில் நிர்வாண போஸ் கொடுத்த கிரண்.. ரசிகர்கள் ஷாக்!
கிரணுடன் 5 நிமிட ஆடியோ காலுக்கு, ரூ. 9,999 என்றும், 25 நிமிட வீடியோ காலுக்கு, ரூ.25,0000 எனவும், 15 நிமிட விடியோ காலுக்கு 14,000 ஆயிரம் என்றும் கூறப்பட்டிருந்தது.
ஃபுல்டைம் இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாகவும் இருக்கும் கிரண் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஒரு பக்கம் ரசிகர்கள் கூட்டம் அலைமோதினாலும், இன்னொருப்பக்கம் அவர் செய்யும் செயலால் கடுமையான கண்டனங்களையும், விமர்சனங்கள் எதிர்கொண்டு வருகிறார். ஆனாலும், கிரண் அது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில் லேட்டஸ்டாக நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்து அனைவருக்குமே ஷாக் கொடுத்துள்ளார் கிரண்.
நிர்வாண புகைப்படம்
கையில் சிகரெட்டுடன், நிர்வாணமாக அமர்ந்து புகைப்பிடிக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளது, இந்த செய்தியை கேட்ட அனைவருக்கும் மென்மேலும் அதிர்ச்சியாக அமைந்தது. ஒரே புகைப்படத்தால் சோஷியல்மீடியாவில் ஹாட்டாப்பிக்காக மாறியுள்ளார் கிரண்.
தனக்கு தானே கட்டண நிர்ணயம்
விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஜெமினி’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கிரண். அதனை தொடர்ந்து அஜித்துடன் ‘வில்லன்’, கமல்ஹாசனுடன் ‘அன்பே சிவம்’, பிரசாந்த்துடன் ‘வின்னர்’ என பல திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். வயதானதும் பட வாய்ப்பின்றி இருக்கும் இவர் தனக்கே ரேட் பிக்ஸ் செய்து அறிவித்ததுதான் இன்ஸ்டாகிராமில் ஹாட் டாபிக்.
கிரண் பெயரில் செயலி
அவர் வெளியிட்ட செய்தியில், அவர் தன்னுடைய பெயரில் செயலி ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும், அந்த செயலி மூலம் தன்னுடன் பேசவும், பழகவும், டின்னர் செல்லவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவருடைய போட்டோக்களை பெறுவதற்கும் கூட கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எதற்கு எவ்வளவு?
அதாவது கிரணை நேரடியாக சந்தித்து பேசி, சில மணி நேரம் பொழுது கழித்து, டின்னர் சாப்பிடுவதற்கு மட்டும் ஒன்றரை லட்சம் ரூபாயாம். அவருடைய கவர்ச்சி போட்டோக்களை பெறுவதற்கு ரூ.2000 கட்டணமாம், வீடியோ காலில் பேசுவதற்கு, அரை மணி நேரத்துக்கு ரூ.30,000 கட்டணமாகவும், 15 நிமிடங்களுக்கு ரூ.13,000 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த செயலியை பயன்படுத்துவதற்கே 49 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் விளம்பரம்
கிரணின் இஸ்டாகிராம் பக்கத்தில், அந்த செயலிக்கு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, அவர் இட்டிருந்த பதிவில் கிரணுடன் 5 நிமிட ஆடியோ காலுக்கு, ரூ. 9,999 என்றும், 25 நிமிட வீடியோ காலுக்கு, ரூ.25,0000 எனவும், 15 நிமிட விடியோ காலுக்கு 14,000 ஆயிரம் என்றும் கூறப்பட்டிருந்தது. கவர்ச்சியுடன் எடுக்கப்பட்ட போட்டோக்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் என்றும் தகவல் வெளியானது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்