21 Years of Lagaan: மறக்க முடியாத படம்! கிரிக்கெட்னு யோசிச்சாலே ’லகான்’தான்.. நினைவுகளை திருப்பும் ரசிகர்கள்!
சுதந்திரத்துக்கு முந்தைய விக்டோரியா மகாராணி காலக்கட்டத்திலும், கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தியும் வெளியான இப்படம், இந்தியாவின் மிகப்பெரும் வெற்றிப் படங்களுள் ஒன்றாக இன்றளவும் திகழ்கிறது.
இயக்குநர் அசுதோஷ் கௌரிக்கர் இயக்கத்தில் நடிகர் ஆமிர் கான் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 2001ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ’லகான்’.
ஆஸ்கார் பரிந்துரை
சுதந்திரத்துக்கு முந்தைய விக்டோரியா மகாராணி காலக்கட்டத்திலும் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தியும் வெளியான இப்படம் இந்தியாவின் மிகப்பெரும் வெற்றிப் படங்களுள் ஒன்றாக இன்றளவும் திகழ்கிறது.
மேலும், ’மதர் இந்தியா’ படத்துக்குப் பிறகு இந்தியாவில் இருந்து ஆஸ்காரில் ’சிறந்த வெளிநாட்டு திரைப்படம்’ பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட இரண்டாவது படம் எனும் சாதனையையும் லகான் புரிந்துள்ளது.
21 ஆண்டுகள் நிறைவு
லகான் படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்படத்தை நினைவுகூர்ந்து நடிகர் அமீர்கான் வீட்டில் படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.
View this post on Instagram
கடந்த ஆண்டு நடைபெற்ற இப்படத்தின் 20 ஆண்டு நிறைவு விழாவை, கொரோனா மத்தியில் படக்குழுவினர் இணையம் வழியாகக் கொண்டாடினர்.
வருகிறார் லால் சிங் சத்தா
நடிகர் அமீர்கான் நடிப்பில் ஹாலிவுட்டின் Forrest Gump பட அதிகாரப்பூர்வ ரீமேக்கான லால் சிங் சத்தா படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்