2 ஆண்டுகளுக்கு முன்பே வெளியான துணிவு... மீண்டும் அஜித் படத்திற்கு பெயர் சூட்டப்பட்டது ஏன்?
பொதுவாக தமிழ் திரையுலகில் பழைய படத்தின் டைட்டிலை புதிய படத்திற்கு வைக்கும் வழக்கம் உள்ளது தான். ஆனால் 2020 ஆம் ஆண்டில் ரிலீஸ் ஆன துணிவு என்ற திரைப்பட டைட்டிலை, 2 ஆண்டில் மீண்டும் பயன்படுத்தியுள்ளனர்.
நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு (Thunivu) படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் அஜித் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் அஜித் நடித்துள்ளார். இந்த கூட்டணியில் முதலில் நேர்கொண்ட பார்வை, கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் வலிமை படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் 3வது படத்தை பெரும் எதிர்பார்ப்போடு ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர்.
இந்த படத்தில் நாயகியாக பிரபல நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், பாங்காங், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது.
படம் அறிவிப்பு மட்டுமே வெளியான நிலையில் 6 மாதங்களாக எந்தவித அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்தது. ஆனால் ரசிகர்களின் ஏக்கங்களை போக்கும் வகையில் அஜித் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியானது. அதன்படி இந்த படத்துக்கு “துணிவு” என பெயரிடப்பட்டுள்ளது. மாஸ் லுக்கில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் போட்டோவும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் #AK61FirstLook, #AjithKumar ஆகிய ஹேஸ்டேக்குகளில் தற்போது வரை அந்த போஸ்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இந்த நிலையில் 2020ல் துணிவு என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் கோடீஸ்வரன் மற்றும் நடிகர்கள் விக்டர் சத்யா கிஷானி போன்றோர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். துணிவு திரைப்படம் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் நாள் வெளியாகியுள்ளது.
View this post on Instagram
பொதுவாக தமிழ் திரையுலகில் பழைய படத்தின் டைட்டிலை புதிய படத்திற்கு வைக்கும் வழக்கம் மிகவும் பரிச்சயமானது ஆனால் 2020 ஆம் ஆண்டில் ரிலீஸ் ஆன துணிவு என்ற திரைப்படத்தின் டைட்டிலை 2022-ல் வழியாக இருக்கும் நடிகர் அஜித்குமாரின் திரைப்படத்திற்கும் வைத்திருப்பது பேசு பொருளாக மாறி உள்ளது.
தமிழ் திரை உலகில் கதைக்கு தான் பஞ்சம் எடுத்த கதையை மறுபடியும் எடுத்து வருகிறார்கள் இயக்குனர்கள் என்று ரசிகர்கள் கலாய்த்து வரும் நிலையில் தற்போது இரண்டு வருடத்திற்கு முன்பு ரிலீசான படத்தின் டைட்டிலேயே வைத்திருக்கிறார்கள்.
இது அஜித் ஹேட்டர்ஸ்க்கு தீனி போட்டது போல அமைந்து விட்டது.