மேலும் அறிய

Cinema Headlines : களைகட்டிய வரலட்சுமி சங்கீத் கொண்டாட்டம்...100 கோடி தொட்ட மகாராஜா வசூல்...சினிமா செய்திகள் இன்று

நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி திருமண கொண்டாட்டங்கள் முதல் நெப்போலியன் மகனின் திருமணம் உள்ளிட்ட இன்று ஜூலை 2 ஆம் தேதி சினிமா செய்திகளைப் பார்க்கலாம்

வரலட்சுமி சங்கீத் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சரத்குமார் மகள் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் (Varalaxmi Sarathkumar) திருமணம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், திருமணத்துக்கு முன்னதான கொண்டாட்டங்களான ஹல்தி, மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பிரபலங்கள் வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் திருமண கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அந்தப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.

நெப்போலியன் மகன் திருமணம்

நெப்போலியனின் இளைய மகன் அன்மையில் தனது பட்டப் படிப்பை முடித்தார். படிப்பு முடிந்த கையோடு அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார் நெப்போலியன். தனது மகன் திருமணத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமண பத்திரிகையை அவருக்கு வழங்கி அழைப்பு விடுத்துள்ளார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நெப்போலியனின் மகன் திருமணத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம் .  

மகாராஜா பாக்ஸ் ஆபிஸ்

விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் மகாராஜா. அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ், சிங்கம் புலி, அபிராமி, நட்டி, பாரதிராஜா, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் அதன் திரைக்கதைக்காக பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து பாலியல் வன்முறையைக் கையாண்ட விதம் மற்றும் யு/ ஏ சான்றிதழ் உள்ளிட்ட காரணங்களால் இணையத்தில் நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் இப்படி கலவையான விமர்சனங்கள் தாண்டி, வசூலில் இப்படம் வெளியானது முதலே ஏறுமுகத்தில் பயணித்து வருகிறது. மகாராஜா திரைப்படம் உலகளவில் 100 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

 நாயகனாகும் பிக் பாஸ் பிரபலம்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பயணித்தவர்களில் ஒருவர் நடிகர் ராஜு ஜெயமோகன். விஜய் டிவியில் எவர்கிரீன் தொடரான 'கனா காணும் காலங்கள்' மூலம் அறிமுகமான ராஜூ ஜெயமோகன் அதைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீசன் 2 , நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட தொடர்களில் தோன்றி சின்னத்திரை மக்களின் மனதில் இடம் பிடித்தார். அவரின் டைமிங் காமெடி சென்ஸ் அனைவரும் அறிந்ததே! 'நட்புன்னா என்னனு தெரியுமா" , "டான்", "முருங்கக்காய்  சிப்ஸ்" உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தார். தற்போது Rain of Arrows Entertainemt நிறுவனத்தின் கீழ் சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிக்கும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார் நடிகர் ராஜூ ஜெயமோகன். இவர் ஏற்கனவே 'எண்ணித்துணிக' என்ற படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  'காலங்களில் அவள் வசந்தம்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ராகவ் மிர்தாத் தான் ராஜூ அறிமுகமாகும் இப்படத்தை இயக்க உள்ளார். 'சைஸ் ஜீரோ' படத்தின் வசனங்களையும், தேசிய விருது பெற்ற 'பாரம்' படத்தை திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியவர் ராகவ் மிர்தாத் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Starlink Internet Price: ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?Mayor Issue | “பொண்ணுனா கேவலமா போச்சா” கடலூர் மேயர் Vs அதிகாரிகள் மோதல் பின்ணனி என்ன? | Cuddalore

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Starlink Internet Price: ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Jio SpaceX Deal: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
Chennai Car Parking Rules: ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
Embed widget