இரவு பார்ட்டி முடிந்து வீடு திரும்பிய சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை - சிக்கிய சிறுவர்கள்!
கடந்த மே 28ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்த நிலையில், வன்கொடுமையில் ஈடுபட்ட நால்வரும் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இரவு பார்ட்டி முடிந்து வீட்டுக்குத் திரும்பிய 17 வயது சிறுமியை அடையாளம் தெரியாத நான்கு பேர் மெர்சிடீஸ் காரில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த சிறுவர்கள்
கடந்த மே 28ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்த நிலையில், இந்த வன்கொடுமையில் ஈடுபட்ட நால்வரும் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காரையும் அம்மாநில காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
முன்னதாக அப்பெண் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து தன் வீட்டில் கூறாமலும், சிறுவர்கள் தன்னை அவமானப் படுத்தியதாக மட்டுமே கூறிய நிலையில், இது குறித்து வழக்கு பதியப்பட்டது.
மேலும் படிக்க: Kanchipuram: போதையில் மகளை மறந்த தந்தை! 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மாணவன்.!
உண்மையை சொல்லாத சிறுமி, கண்டறிந்த பெற்றோர்
ஆனால், தொடர்ந்து சிறுமியின் உடலில் இருந்த காயங்களால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் தன்னிடம் சில சிறுவர்கள் தவறாக நடந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இவ்வழக்கு போக்சோ வழக்காக மாற்றப்பட்டு சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தன்னை மருத்துவ பரிசோதனை செய்த பெண் ஊழியரிடம் தான் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உண்மையை சிறுமி கூறியுள்ளார்.
அடையாளம் காணப்பட்ட மூவர்
இதனையடுத்து தொடர்ந்த விசாரணையில் தன்னை சில இளைஞர்கள் பார்ட்டி முடிந்து வீட்டில் விடுவதாக உறுதியளித்ததாகவும், அதனை நம்பி வாகனத்தில் இருந்த மூன்று முதல் நான்கு நபர்களுடன் வாகனத்தில் ஏறிச்சென்றபோது இருட்டான பகுதியில் வாகனத்தை நிறுத்தி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்
இச்சம்பவம் குறித்த விசாரணையில் மூன்று பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: லாரி மீது மோதி பற்றி எரிந்த பேருந்து..! 2 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு..! 12 பேர் படுகாயம்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்