15 Years of Sivaji: வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி - நடிகர் ரஜினி வெளியிட்ட 40 நொடி ஆடியோ!!
வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது சிவாஜி. அப்படம் ரிலீஸாகி 15 ஆண்டுகள் கடந்துள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்து வசூலில் சாதனை படைத்த திரைப்படம் சிவாஜி. இப்படம் 2007ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் ரஜினி, ஸ்ரேயா, விவேக் உள்ளிட்ட நடிகர்கள் பலர் நடித்தனர். இந்நிலையில் படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்ததை அடுத்து நடிகர் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாய்ஸ் நோட்டில், ஏவிஎம் தயாரித்து, இயக்குநர் ஷங்கர் இயக்கிய பிரம்மாண்டமான படம் சிவாஜி.
வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. அது ரிலீஸாகி 15 ஆண்டுகள் கடந்துள்ளது. இந்த தருணத்தில் அந்த படத்தைத் தயாரித்த ஏவிஎம் புரெடெக்ஷன் அவர்களுக்கும், இயக்குநர் ஷங்கருக்கும், பணிபுரிந்த எல்லா கலைநுட்ப கலைஞர்களுக்கும், அந்த படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக்கிய ரசிகப் பெருமக்களுக்கும் என்னுடைய நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, நடிகர் ரஜினியை இன்று நேரில் சந்தித்தார் இயக்குநர் ஷங்கர். ஷங்கர் மகளான அதிதியும் ரஜினியை சந்தித்து புகைபடங்களை வெளியிட்டார்
The one & only Superstar! Thalaivar @rajinikanth exclusive voice message! #15yearsofSivaji @shankarshanmugh @arrahman #KVAnand @shriya1109 #ActorVivek @editoranthony @PeterHeinOffl #ThotaTharrani #AVMProductions#SuperstarRajinikanth @arunaguhan_ #OnlyOnTwitter pic.twitter.com/zEsF2Hw5xC
— AVM Productions (@avmproductions) June 15, 2022