மேலும் அறிய

விவிபேட் விவகாரம்: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்- வாக்குச்சீட்டுக்கும் ’நோ’

100 சதவீத ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்று கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

விவிபேட் இயந்திரம் தொடர்பான வழக்கில் அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக மற்றும் அறிவியல் ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரம் ஆகியவற்றின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

100 சதவீத ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்று கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. அப்போது பேசிய நீதிபதிகள், ’’நாடு தழுவிய முறையில் மேற்கொள்ளப்படும் வாக்குப்பதிவு அமைப்பை கண்மூடித்தனமாக நம்பாமல் இருப்பது தேவையற்ற சந்தேகங்களுக்கு வழிவகுக்கும். அறிவியல் பூர்வமான விசாரணை செய்யலாமே தவிர, கண்மூடித்தனமான சந்தேகங்கள் கூடாது’’ என்று தெரிவித்தனர்.

இரண்டு கோரிக்கைகளும் நிராகரிப்பு

ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை, வாக்காளர் கையில் கொடுக்க வலியுறுத்திய கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

பின்னணி என்ன?

இந்திய நாட்டில் ம்க்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது, கடந்த 20 ஆண்டுகளாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் அப்போதில் இருந்தே அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இதனால், விவிபேட் ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு முறை கொண்டு வரப்பட்டது. 

யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை வாக்காளர் தெரிந்து கொள்ள விவிபேட் பயன்படுத்தப்பட்டது. எனினும் 7 நொடிகள் மட்டுமே அது திரையில் தோன்றும். வாக்களிக்கும்போது, ​​சீரியல் நம்பர், வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய சீட்டு அச்சிடப்பட்டு வாக்காளருக்கு வழங்கப்படும்.

விவிபேட் மூலம் சரிபார்ப்பு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும் விவிபேட் மூலம் சரிபார்ப்பதை கட்டாயமாக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக மற்றும் அறிவியல் ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரம் ஆகியவற்றின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Madurantakam By Election: மதுராந்தகம் தொகுதியில் என்ன நடக்கிறது? 2026 தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? முழு பின்னணி இதோ!
மதுராந்தகம் தொகுதியில் என்ன நடக்கிறது? 2026 தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? முழு பின்னணி இதோ!
TN Bypoll: அப்படிப்போடு..! பெருந்துறைக்கும் இடைத்தேர்தல்? திமுக வேட்பாளரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
அப்படிப்போடு..! பெருந்துறைக்கும் இடைத்தேர்தல்? திமுக வேட்பாளரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
Madurantakam By Election: மதுராந்தகம் இடைத்தேர்தல்.. தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனம்! முக்கிய பொறுப்பு யாருக்கு!
Madurantakam By Election: மதுராந்தகம் இடைத்தேர்தல்.. தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனம்! முக்கிய பொறுப்பு யாருக்கு!
TN By Election: தோற்ற தொகுதிகளிலும் வெற்றி காணுமா TVK? 100 நாள் ஆட்சி கைகொடுக்குமா? CM விஜயின் பலம் கூடுமா?
தோற்ற தொகுதிகளிலும் வெற்றி காணுமா TVK? 100 நாள் ஆட்சி கைகொடுக்குமா? CM விஜயின் பலம் கூடுமா?

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EV Velu: ரூ.2,000 கோடிக்கு ஒப்புதல் பெற்றது எப்படி? 80 திட்டங்கள் - எ.வ. வேலு மீது ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு
ரூ.2,000 கோடிக்கு ஒப்புதல் பெற்றது எப்படி? 80 திட்டங்கள் - எ.வ. வேலு மீது ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு
TN By Election : 5 தொகுதிக்கு இடைத்தேர்தல் இப்போதைக்கு இல்லை.! விஜய்க்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்- நடந்தது என்ன.?
5 தொகுதிக்கு இடைத்தேர்தல் இப்போதைக்கு இல்லை.! விஜய்க்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்- நடந்தது என்ன.?
Vijay Commission : ’திமுகவிற்கு முற்றும் நெருக்கடி’ புதிய விசாரணை கமிஷனை அமைக்க முதல்வர் விஜய் முடிவு…!
'இனி விஜய் கமிஷன்’ திமுகவிற்கு நெருக்கடி கொடுக்க முதல்வர் முடிவு..!
டாடா ஹாரியர் EV: 600 கி.மீ ரேஞ்ச், ரூ.2.75 லட்சம் வரை அதிரடி சலுகை- மிஸ் பண்ணிடாதீங்க!
டாடா ஹாரியர் EV: 600 கி.மீ ரேஞ்ச், ரூ.2.75 லட்சம் வரை அதிரடி சலுகை- மிஸ் பண்ணிடாதீங்க!
TN Bypoll: அப்படிப்போடு..! பெருந்துறைக்கும் இடைத்தேர்தல்? திமுக வேட்பாளரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
அப்படிப்போடு..! பெருந்துறைக்கும் இடைத்தேர்தல்? திமுக வேட்பாளரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
”சிஎம் விஜய் பேச்சை நீக்க முடியாது” சட்டசபையில் அமளியில் திமுக- கூண்டோடு வெளியேற்றிய சபாநாயகர்
”சிஎம் விஜய் பேச்சை நீக்க முடியாது” சட்டசபையில் அமளியில் திமுக- கூண்டோடு வெளியேற்றிய சபாநாயகர்
Toyota Cars: ஹேட்ச்பேக், க்ராஸ் ஓவர் SUV, 7 சீட்டர், ஹைப்ரிட் - மொத்தமா புதுசா இறக்கும் ஜப்பான் ப்ராண்ட் - முழு விவரம்
ஹேட்ச்பேக், க்ராஸ் ஓவர் SUV, 7 சீட்டர், ஹைப்ரிட் - மொத்தமா புதுசா இறக்கும் ஜப்பான் ப்ராண்ட் - முழு விவரம்
TN By Election: தோற்ற தொகுதிகளிலும் வெற்றி காணுமா TVK? 100 நாள் ஆட்சி கைகொடுக்குமா? CM விஜயின் பலம் கூடுமா?
தோற்ற தொகுதிகளிலும் வெற்றி காணுமா TVK? 100 நாள் ஆட்சி கைகொடுக்குமா? CM விஜயின் பலம் கூடுமா?
Embed widget