மேலும் அறிய
Advertisement
புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்று வாக்கு சேகரித்த கதிர் ஆனந்த்
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாணியம்பாடி அருகே புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டு தேவாலயத்தில் வாக்கு சேகரித்தார் வேலூர் மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் கதிர் ஆனந்த்.
நாடாளுமன்றத் தேர்தல் வேலூர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது மலை கிராமமான பீமன்குளம் பகுதியில் உள்ள சென்றாயன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.
இதனை தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் வேன் மூலம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட கதிர் ஆனந்த் ஆலங்காயம் பகுதியில் தூய பவுல் லுத்திரன் திருச்சபைக்கு சென்ற அவர் புனித வெள்ளி சிறப்பு பிராத்தனையில் கலந்து கொண்டு தேவாலயத்தில் இருந்தவர்களிடம் வாக்குகளை சேகரித்தார். பின்னர் நிம்மியம்பட்டு பகுதியில் பொதுமக்கள் கதிர் ஆனந்திற்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
அதனை தொடர்ந்து வெள்ளகுட்டை, கொத்தகோட்டை பகுதிகளுக்கும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதில், இந்தியா கூட்டணி கட்சி உள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion