மேலும் அறிய

TVK Vijay: சென்னையைக் குறிவைக்கும் விஜய்! – கும்மிடிப்பூண்டி பிரச்சாரம் ரத்து; 20ஆம் தேதி மெகா பிளான்

TVK Vijay Election Campaign: கும்மிடிப்பூண்டியில் விஜயின் பிரச்சாரம் மீண்டும் ரத்தாகியது. வரும் 20ஆம் தேதி சென்னையில் பல்வேறு பகுதிகளில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்.

கும்மிடிப்பூண்டியில் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, பல முன்னணி கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அனைவரும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நோக்கி சொல்கின்றனர். பிரச்சாரத்துக்கான கடைசி தேதி 21ஆம் தேதி ஆகும்.

தவெக தலைவர் விஜயும் கடந்த சில தினங்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருநெல்வேலி, தூத்துக்குடி, காடைக்குடி, கன்னியாகுமரி, திருப்பூரில் ரோடு ஷோ, பிரச்சாரம் நடத்தினார். மக்களின் கட்டுங்கடாத கூட்டத்தால் விஜயால் பேசமுடியாத நிலை ஏற்பட்டது. சென்னையில் நேற்று தி.நகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர் ஆகிய தொகுதிகளில் ரோடு ஷோ நடத்தினார். புரசைவாக்கத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 8 மணி வரை அனுமதி வழங்கியும் 6 மணிக்கே பிரச்சாரத்தை ரத்து செய்தார். கரூர் சம்பவத்திற்கு பிறகு 6 மணிக்கு மேல் மக்களை சந்திப்பது, பிரச்சாரத்தை மேற்கொள்வதை விஜய் தவிர்த்து வருகிறார். 

கும்மிபிடிப்பூண்டி பிரச்சாரம் மீண்டும் ரத்து

இந்த நிலையில், கும்மிடிப்பூண்டியில் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 13 ஆம் தேதி கவரைப்பேட்டையில் பிரச்சாரத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய நிலையில், ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் 19-ஆம் தேதி பிரச்சாரம் என தலைமை அறிவித்தது. இந்த நிலையில், 19-ஆம் தேதி நடைபெற இருந்த பிரச்சாரம் மீண்டும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. 13-ஆம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை பிரச்சாரத்துக்கு அனுமதி வழங்கிய நிலையில், ரத்து செய்யப்பட்டதால் மீண்டும் அனுமதி கோரிய நிலையில் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை கூடுதலான நேரம்  அளிக்கப்பட்ட நிலையிலும் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெரம்பூரில் மீண்டும் விஜய் பிரச்சாரம்

சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் வருகிற 20ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், பெரம்பூர் தொகுதியோடு சேர்த்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தலைப்பு செய்திகள்

PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget