TVK slams seeman : "திரள்நிதி, கட்டுத்தொகை, உளறல்.." சீமானை கிழித்து தொங்கவிட்ட தவெக
TVK reply Seeman : ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் அண்ணன் சீமான் எதையாவது உளருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார் என தவெக சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளது

பிரசாந்த் கிஷோர் போன்ற வியூக வகுப்பாளர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கு பெயர் தான் பணக் கொழுப்பு என்று தவெக தலைவர் விஜயை சீமான் பேசியதற்கு தவெக தற்போது பதிலடி கொடுத்துள்ளது.
சீமான் பேச்சு:
அவதூறு வழக்கில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாம் உடலில் கொழுப்பு கேள்வி பட்டிருப்போம், தமிழ்நாட்டை பற்றி எதுவும் தெரியாத வியூக வகுப்பாளர்களை இங்கு அழைத்து வருவது என்பது பணக் கொழுப்பு என்று கூறினார். இதனை சொல்லிவிட்டு அவரே தன்னுடைய ட்ரேட் மார்க்கான சிரிப்பை வெளிப்படுத்தினார். அதோடு, பணக் கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும் என்றும் பேசிய அவர், இவற்றையெல்லாம் பேசி நேரத்தை வீணடிக்கவில்லையென்றும் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, கத்திரிக்காய் என்று சீட்டில் எழுதினால் அது விளைந்து கைகளுக்கு காயாக கிடைத்துவிடுமா? என்று கேள்வி எழுப்பியுள்ள சீமான், களத்தில் இறங்கி பயிர் செய்தால்தான் கத்திரிக்காய் கிடைக்கும் என்று களத்திற்கே விஜய் செல்லாததை சீமான் மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார்.
இதையும் படிங்க: "டாக்டர் எங்கனு கேட்டா கம்பி கட்டுவாங்க" திமுக-வை விளாசிய கஸ்தூரி!
தவெக பதிலடி:
இந்த நிலையில் சீமானின் பேச்சுக்கு தவெக மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் ஆ. சம்பத்குமார் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டூல்லா அறிக்கையில், ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் அண்ணன் சீமான் எதையாவது உளருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். சமகால சமூகச் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ளாமல் பணக் கொழுப்பு என்று பகிரங்கமாக அறிவித்துள்ள அண்ணன் சீமானுக்கு நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை என்று தான் அர்த்தமாகிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட அண்ணன் சீமான் இன்னும் எத்தனை ஆண்டுகள் "வென்றால் மகிழ்ச்சி,.தோற்றால் பயிற்சி" என்று நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை?
திரள்நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று. அண்ணே, நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம், நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.
இதையும் படிங்க: விசிக நிர்வாகி தாக்கியதாக நாடகமாடிய பெண் எஸ்.ஐ., பணியிடை நீக்கம்
நாங்கள் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது எப்படி என்று சிந்திக்கிறோம் நீங்கள் தமிழ்தேசிய அரசியலை எப்படி வெற்றி பெறாமல் வைத்திருப்பது என்று சிந்திக்கிறீர்கள். பிரபாகரனிசத்தை முன்வைத்து கட்சி தொடங்கிய நீங்கள் இப்போது சீமானிசத்தில் கொண்டு போய் கட்சியை நிறுத்தியிருக்கிறீர்கள்.
ஒன்று சொல்லட்டுமா அண்ணே, எங்கள் தலைவர் தளபதி விஜய் தன் ரசிகர்களை அரசியல் கட்சியின் தொண்டர்களாக உருமாற்றம், செய்து வருகிறார். நீங்கள் உங்கள் கட்சியின் தொண்டர்களை உங்கள் ரசிகர்களாக உருமாற்றம் செய்து வருகிறீர்கள். உங்களோடு என்றும் எங்களுக்கு ஒத்து போகாது அண்ணே.... என்று சீமானை பங்கிரங்கமாக தாக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

