மேலும் அறிய

TVK Vijay: ”தவெக பெண் நிர்வாகியை கட்டையால் தாக்கிய போதை ஆசாமி” வைரலாகும் அரைநிர்வாண வீடியோ

TVK Vijay: திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக வாக்கு கேட்டுச் சென்ற கட்சி நிர்வாகிகளை, போதை ஆசாமி ஒருவர் தாக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

TVK Vijay: திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக வாக்கு கேட்டுச் சென்ற பெண் நிர்வாகியை தாக்கியதாக முதிவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி கிழக்கில் தவெக வாக்கு சேகரிப்பு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக களம் கண்டுள்ளது. அக்கட்சியின் தலைவரான விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிகளில் அவர் ஒரு முறை மட்டுமே தேர்தல் பரப்புரை மேற்கொண்டாலும், அவருக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்க்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற நிர்வாகிகள் மீது, போதை ஆசாமி ஒருவர் தாக்குதல் நடத்த முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதியவர் தாக்க முயன்ற வீடியோ

சம்பவம் தொடர்பாக தவெகவைச் சேர்ந்தவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், புதன்கிழமை இரவு திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள கே.கே.நகர் பகுதியில் தவெக தோழர்கள் கட்சி தலைவர் விஜய்க்காக  வீடு வீடாக வாக்கு சேகரிக்கச் சென்ற போது 60 வயது முதியவர் ஒருவர் குடிபோதையில் பெண் நிர்வாகிகளை அநாகரிகமாப் பேசி, செருப்பை வைத்து எறிந்ததோடு மட்டுமின்றி கம்பை வீசி அடித்ததால் பெண் நிர்வாகி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு தகாத வார்த்தைகள் பேசி திமுகவிற்கு ஆதரவாகப் பேசியுள்ளார். தவெக தோழர்கள் உடனடியாக கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட நபர் மீது புகாரளித்துள்ளனர். குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

அநாகரீகமான, ஆபசமான பேச்சு

பதிவில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பிரச்னையின் தொடக்கப்புள்ளி என்ன? வாக்குவாதம் ஏற்பட்டது ஏன்? என்பது தொடர்பான எந்த தகவலும் இல்லை. இருப்பினும் அந்த வீடியோவின்படி, “மேல் சட்டை கூட அணியாத அந்த முதியவர் வீட்டின் கேட்டிற்கு அந்த பக்கமாக இருந்துகொண்டு, கையில் கட்டை எடுத்து தவெகவினரை தாக்கும் வகையில் ஆவேசமாக வீசியுள்ளார். அவருடன் இருந்த பெண்மணி தடுக்க முயன்றும், மீண்டும் மீண்டும் கட்டையை எடுத்து அடிக்க முயன்றுள்ளார். அநாகரீகமான ஆபாச வாஎத்தைகளையும் பேசி திட்டியுள்ளார். காவல்நிலையத்தில் புகாரளிப்பேன் எனவும் மிரட்டியுள்ளார். இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து தவெகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

போலீசாருடன் வாக்குவாதம்

இதையடுத்து கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு சென்று தவெக நிர்வாகிகள் சார்பில் புகாரளிக்கப்பட்டது. மேலும் அந்த நபரை உடனடியாக அழைத்து விசாரணை நடத்தவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், மாலை 6 மணிக்கு மேல் வயதானவர்கள் யாரையும் அழைத்து வந்து விசாரணை நடத்துவதில்லை என காவல்துறை தரப்பில் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியில் விரைவில் குறிப்பிட்ட நபரை அழைத்து விசாரணை நடத்தப்படும் என காவல்துறை உறுதியளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் கலைந்து சென்றுள்ளனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Embed widget