மேலும் அறிய

Trichy Corporation Election 2022: அமைச்சர் நேருவுக்கு நெருக்கடி.. திருச்சி மாநகராட்சி துணை மேயர் பதவி யாருக்கு?

திருச்சி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவிற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், தலைமையிடம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும்  திமுக வட்டாரங்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த  19-ஆம் தேதி நடை பெற்றது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 4 ஆம் தேதி முடிவடைந்தது.  கடந்த 7 ஆம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடபட்டது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக  இந்த தேர்தலில் பெரும்பாலான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளையும் கைப்பற்றி மீண்டும் திருச்சியை தனது கோட்டையாக மாற்றிவிட வேண்டும் என தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் தீவிரமாக தேர்தலில் போட்டியிட்டனர். அதேபோன்று அ.தி.மு.க. வினர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. இதனால் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று,  ஆளுங்கட்சிக்கு இந்த தேர்தல் மூலம் பாடம் புகட்டிவிடலாம்  என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதிமுக திருச்சி மாநகராட்சியில்  3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 

Trichy Corporation Election 2022: அமைச்சர் நேருவுக்கு நெருக்கடி.. திருச்சி மாநகராட்சி துணை மேயர் பதவி யாருக்கு?

இதனை தொடர்ந்து திமுக திருச்சி மாநகராட்சியில் திமுக தனியாக  பெருவாரியான 49 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது. அதேபோல் திமுக கூட்டனி கட்சியான காங்கிரஸ் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில்  தி.மு.க.வை  பொறுத்த மட்டில் மேயர் வேட்பாளர் யார்?  என்பது உறுதியாகிவிட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தனர். அதேபோல் துணை மேயர் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி எழுந்துள்ளது. ஏன் என்றால் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியினர் துணையர் மேயர் பதவி கேட்டு  வருகிறார்கள். இதனால் துணை மேயர் பதவிக்கு திமுக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஏன் என்றால் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தீவிர ஆதரவாளர் மதிவாணன் மாநகராட்சி 16 வது வார்டில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து நின்ற மற்ற கட்சியை சேர்ந்த டெப்பாசிட் இழக்கசெய்து 4427 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆகையால் தனது ஆதரவாளர் மதிவாணனுக்கு துணை மேயர் பதவி வாங்கிகொடுக்க வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தி வருகிறார்.

இதனை தொடர்ந்து திமுக 11 வது வார்டு வேட்பாளர் விஜயா ஜெயராஜ் 3534 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு திமுக தலைமையில் உள்ள சில முக்கிய நிர்வாகிகள் ஆதரவுடன் துணை மேயர் பதவிக்கு அடித்தளம் போட்டு வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. 

Trichy Corporation Election 2022: அமைச்சர் நேருவுக்கு நெருக்கடி.. திருச்சி மாநகராட்சி துணை மேயர் பதவி யாருக்கு?

மேலும் இதனை தொடர்ந்து  காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் பேசியபோது அவர்கள் தெரிவித்தது,  திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்தான் மேயராக அதிக அளவில் இருந்துள்ளனர். அதேசமயம் மக்களின் நலனைக்கருதி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி பெறுவாரியான ஆதரவுகளையும் பெற்றுள்ளது. குறிப்பாக இந்த தேர்தலில் திருச்சியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட 15 இடங்களை ஓதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தபட்டது. ஆனால் வெறும் 5 இடங்களை மட்டுமே ஓதுக்கீடு செய்தனர். இந்நிலையில் 5 வார்டுகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் மக்களின் ஆதரவு எப்போதும் எங்களுக்கு இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது. ஆகையால் காங்கிரஸ் கட்சிக்கு திருச்சி மாநகராட்சி துணை மேயர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வலியுறுத்தி வருகிறார்கள். இதனால் திமுகவில் துணை மேயர் கனவில் இருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்  திருச்சி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவிற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், தலைமையிடம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும்  திமுக வட்டாரங்கள் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
Fengal Cyclone LIVE: சீறும் கடல்! மெரினா கடற்கரையில் ஒதுங்கிய எச்சரிக்கை மிதவை
Fengal Cyclone LIVE: சீறும் கடல்! மெரினா கடற்கரையில் ஒதுங்கிய எச்சரிக்கை மிதவை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
Fengal Cyclone LIVE: சீறும் கடல்! மெரினா கடற்கரையில் ஒதுங்கிய எச்சரிக்கை மிதவை
Fengal Cyclone LIVE: சீறும் கடல்! மெரினா கடற்கரையில் ஒதுங்கிய எச்சரிக்கை மிதவை
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
Tamilnadu RoundUp: இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்! கடலூர், மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட்!
Tamilnadu RoundUp: இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்! கடலூர், மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட்!
Embed widget