மேலும் அறிய

Puducherry Traffic Changes: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்; முக்கியச் சாலைகள் மூடல்: போலீஸ் முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரியில் நாளை சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி லாஸ்பேட்டை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை (மே 4) வெளியாகின்றன. புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதையொட்டி, வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைந்துள்ள லாஸ்பேட்டை பகுதியில் அதிரடி போக்குவரத்து மாற்றங்களை காவல்துறை அறிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் 15-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, புதுச்சேரி, கேரளா, அசாமில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதியும், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23-ம் தேதியும் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளி்ல் 2 கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி லாஸ்பேட்டை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.,

போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் வாகன நிறுத்தம்:

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் மற்றும் தாகூர் கலைக் கல்லூரி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:

வாகன நிறுத்தம்:

  • மகளிர் பொறியியல் கல்லூரிக்கு வருவோர்: நாவலர் நெடுஞ்செழியன் மேல்நிலைப் பள்ளி.
  • மோதிலால் நேரு பாலிடெக்னிக் வருவோர்: வள்ளலார் பள்ளி பின்புறம்.
  • தாகூர் கலைக் கல்லூரி வருவோர்: கல்லூரி மைதானம்.

பாதை மாற்றம் மற்றும் தடை:

ஜீவா காலனியில் இருந்து விமான நிலைய சாலைக்கு செல்லும் வாகனங்கள் நாவலர் நெடுஞ்செழியன் சந்திப்பில் திருப்பி விடப்படும்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை வழியாக வரும் வாகனங்கள் ஜெ.டி.எஸ். (JTS) சந்திப்பில் ராஜாஜி சாலைக்கு மாற்றி விடப்படும்.

விமான நிலைய சாலை வழியாக வரும் வாகனங்கள் நீதிபதிகள் குடியிருப்பு பகுதியில் திருப்பி விடப்படும்.

எந்தவொரு அரசியல் கட்சி வாகனங்களும் வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.

வாக்கு எண்ணிக்கை மைய கட்டுப்பாடுகள்:

தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது:

QR கோடு அடையாள அட்டை: தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட QR குறியீடு மற்றும் புகைப்படம் கொண்ட அடையாள அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே நுழைய அனுமதி உண்டு.

செல்போனுக்கு தடை: வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரைத் தவிர, வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்ட வேறு எவரும் கைபேசி (Mobile Phone) கொண்டு செல்ல அனுமதியில்லை.

வெளிப்படையான நடைமுறை: கட்டுப்பாட்டு கருவிகளில் (Control Units) இருந்து பெறப்படும் முடிவுகள் (படிவம் 17C-II), முகவர்களின் முன்னிலையிலேயே தயார் செய்யப்பட்டு அவர்களின் கையொப்பம் பெறப்படும்.

நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பு: ஒவ்வொரு மேசையிலும் உள்ள நுண் பார்வையாளர்கள் முடிவுகளைத் தனியாகக் குறித்துக்கொண்டு, ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் குறுக்குச் சரிபார்ப்பிற்காகப் பார்வையாளரிடம் ஒப்படைப்பார்கள்.

புதுச்சேரி மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதைத் தீர்மானிக்கும் இந்த முக்கிய நாளில், பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

CTR Nirmal Kumar:
"உதயநிதி கோமாளித்தனமான வேலைகளை கைவிட வேண்டும், GEN Z என்றால்?" - CTR நிர்மல் குமார் அட்டாக்
Aadhav Arjuna : காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmal Kumar:
"உதயநிதி கோமாளித்தனமான வேலைகளை கைவிட வேண்டும், GEN Z என்றால்?" - CTR நிர்மல் குமார் அட்டாக்
Aadhav Arjuna : காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
Hyundai SUV: வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
Maruti Grand Vitara: மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
அமைச்சர்கள் சிடி நிர்மல்குமார், ராஜ்மோகனுக்கு புதிய பொறுப்பு.! சிஎம் விஜய் அதிரடி உத்தரவு
அமைச்சர்கள் சி.டி நிர்மல்குமார், ராஜ்மோகனுக்கு புதிய பொறுப்பு.! சிஎம் விஜய் அதிரடி உத்தரவு
Embed widget