மேலும் அறிய

VS Babu: "என்னாலதான் அவர் ஜெயிச்சாரு.." மு.க.ஸ்டாலினையே தோற்கடித்த விஎஸ் பாபு!

Tamil Nadu Election 2026: காெளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை வீழ்த்திய தவெக வேட்பாளர் விஎஸ் பாபு தனது வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதன்முறையாக தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் களமிறங்கியுள்ள தவெக இந்த தேர்தல் களத்தில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி தோல்வி:

இந்த தேர்தலில் யாருமே எதிர்பாராத வகையில் கொளத்தூர் தொகுதி மு.க.ஸ்டாலின் கோட்டை என்று குறிப்பிட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் விஎஸ் பாபு-விடம் மு.க.ஸ்டாலின் தோல்வியைத் தழுவினார்.

அவரை வைத்து நான் வென்றேன்:

இந்த வெற்றி குறித்து விஎஸ் பாபு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, திமுக-வின் மாவட்டச் செயலாளராக இருந்தேன். புரசைவாக்கத்தில் 2006 முதல் 2011ம் ஆண்டு வரை திமுக எம்எல்ஏ-வாக இருந்தேன். என்னுடைய எம்எல்ஏ பதவியில்தான் அவர் 2011ம் ஆண்டு வந்து தேர்தலில் நின்றார்.

என்னை வைத்துதான் அவர் அங்கே வெற்றி பெற்றார். அதனால் இப்போது அவரை வைத்து நான் வெற்றி பெற்றேன். அது தளபதிக்கே சேரும். விஜய் மிகப்பெரிய சந்தோஷத்தில் இருக்கிறார். மக்கள் அவரை ஏற்றுக்கொண்டனர். தொண்டர்கள், பெண்கள், வயதானவர்கள் ஏற்றுக்கொண்டனர். நாட்டின் ஒரே தளபதி தவெக தலைவரை ஏற்றுக்கொண்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

திமுக டூ தவெக:

முதலமைச்சராக பொறுப்பு வகித்த மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தது திமுக மட்டுமின்றி மற்ற கட்சியினருக்கும் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. கொளத்தூர் தொகுதியைப் பூர்வீகமாக கொண்ட விஎஸ் பாபு நேரடியாக மு.க.ஸ்டாலினுக்கு எதிராக இந்த தேர்தலில் களமிறங்கினார். அவர் திமுக-வில் இருந்து விலகி, அதிமுக-வில் இணைந்தார். பின்னர், அங்கிருந்து தவெக-விற்கு வந்தார். 

8 ஆயிரம் வாக்குகள்:

தவெக-வில் இணைந்த அவருக்கு கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விஜய் வாய்ப்பு வழங்கினார். மு.க.ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்தில் 74 ஆயிரத்து 202 வாக்குகள் பெற்ற நிலையில், விஎஸ் பாபு அவரைக் காட்டிலும் 8 ஆயிரத்து 795  வாக்குகள் கூடுதலாக பெற்று 82 ஆயிரத்து 997 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

DMK: திமுக படுதோல்விக்கு அடித்தளமிட்ட 7 காரணங்கள்! என்னென்ன ஓர் அலசல்

Advertisement

தலைப்பு செய்திகள்

MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
Embed widget