மேலும் அறிய

கனவுலகில் இருக்கும் விஜய்! வேட்பாளார் பட்டியல் எப்போது? ஹெலிகாப்டரில் வந்த அண்ணாமலை - பியூஸ் கோயலின் பரபரப்பு பேச்சு

TN Election 2026: பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது வரும்? - விஜய்க்கு வாக்குகள் வருமா? என்பது குறித்தும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னையில் பேட்டி.

தமிழக அரசியலில் விஜயகாந்த், கமல்ஹாசன் வரிசையில் மற்றும் ஒருவர் விஜய். அவர் தமிழக மக்களை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியான நிலையில் இன்று அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேட்பாளார்கள் அறிவிப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று சென்னை வந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விஜய் குறித்தும், பாஜக வேட்பாளர்கள் பட்டியல் குறித்தும் பேசினார்.

வேட்பாளர் பட்டியல் எப்போது வரும்?

பாஜக வேட்பாளர் தேர்வு குறித்து மாநில நிர்வாகிகளுடனும், தமிழ்நாடு பாஜக தலைவர்களுடன் உத்தேச வேட்பாளார்கள் குறித்து இன்று ஆலோசிக்க உள்ளதாகவும் அதன் பிறகு, ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

விஜயின் செல்வாக்கு வாக்காக மாறாது 

 “தமிழ்நாட்டில் பல நடிகர்களை அரசியலில் இருந்து மக்கள் நிராகரித்துள்ளனர். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நடிகர்கள் மட்டுமல்ல, தீவிர அரசியலில் ஈடுபட்டவர்கள். விஜய்க்கு பெரும் செல்வாக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் இருக்கலாம். ஆனால், அது வாக்காக மாறாது. தமிழக அரசியலில் விஜயகாந்த், கமல்ஹாசன் வரிசையில் மற்றும் ஒருவர் விஜய். தமிழ்நாடு குறித்தும், மக்கள் குறித்தும் எதுவும் தெரியாமல் விஜய் இங்கே பேசுகிறார். விஜய் ஒரு கனவு உலகில் உள்ளார்; அவர் குறிப்பிட்ட வாக்குகளை மட்டுமே வாங்குவார்” என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.

ஹெலிகாப்டரில் வந்த அண்ணாமலை

தற்போது சென்னையில் நடைபெற்று வரும் பாஜக வேட்பாளர் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் பியூஷ் கோயல் அண்ணாமலை அழைப்பு விடுத்திருந்த நிலையில், புதுச்சேரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு வந்த அண்ணாமலை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். வேட்பாளர் பட்டியலில் அவரின் பெயரும் இடம்பெறும் என்ற அறிவிப்பின் காரணமாக அவர் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால், தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியலை உற்றுநோக்கியுள்ளனர் அரசியல் விமர்சகர்கள்.

தலைப்பு செய்திகள்

Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Embed widget