மேலும் அறிய

TN Election: 4 மேயர்களுக்கு டிக் அடித்த ஸ்டாலின் - பிரியாவுக்கு நோ சொன்னது ஏன்? கரையேறுமா அசெம்ப்ளி கனவு?

TN Election 2026 Mayor As Candidates: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 4 மேயர்கள் திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

TN Election 2026 Mayor As Candidates: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சென்னை மேயர் பிரியா போட்டியிட விரும்பியதாக கூறப்படும் நிலையில், திமுக வாய்ப்பு அளிக்காதது ஏன் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மேயர்கள்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்து, வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனு தாக்கலையே தொடங்கிவிட்டது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் போக திமுக சுமார் 175 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கிறது. இதில் பல வேட்பாளர்களின் பின்புலம் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. குறிப்பாக 4 சிட்டிங் மேயர்களுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சென்னை மேயர் பிரியாவும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முயன்று வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்பது தொடர்பான தகவலும் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

அசெம்ப்ளி கனவில் 4 மேயர்கள்

கன்னியாகுமரி தொகுதியில் நாகர்கோவில் மாநகராட்சியின் மேயரான ரெ. மகேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மேயரான சண். ராமநாதன் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராகவும், ஓசூர் மேயர் சத்யா ஓசூர் தொகுதி சட்டமன்ற தொகுதி வேட்பாளராகவும் மற்றும் திருப்பூர் மேயர் தினேஷ் குமார் திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களது சட்டமன்ற கனவு பலிக்குமா என்பதை, மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் தான் உறுதிப்படுத்தும். சென்னை துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட பலரும் விருப்பமனு தாக்கல் செய்தாலும் அவர்களுக்க்லான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

சென்னை மேயர் பிரியாவின் சட்டமன்ற கனவு

தலைநகர் சென்னை மாநகராட்சியின் மூன்றாவது பெண் மேயர்,  முதல் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண் மேயர் மற்றும் மிக இளம் வயது மேயர் என்ற பெருமைக்குரியவர் பிரியா. முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோரின் வழியில், மேயர் பதவியிலிருந்து அப்படியே சட்டமன்றத்திற்குள் நுழைய திட்டமிட்டாராம். தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் வலுவான திமுகவின் பின்புலம் மூலம், சொந்த தொகுதியான திரு.வி.க. நகரில் போட்டியிட்டால் வெற்றி பெற்றுவிட முடியும் எனவும் நம்பிக்கை கொண்டிருந்துள்ளார். தனக்கு நெருக்கமான அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் மூலமும், தலைக்கு தனது விருப்பத்தை தெரிவித்தாராம். இதனால், திரு.வி. க. நகருக்கான வேட்பாளர்கள் பரிசீலனை பட்டியலில் பிரியாவின் பெயரும் அடிபட்டதாக கூறப்படுகிறது.

TN Election: 4 மேயர்களுக்கு டிக் அடித்த ஸ்டாலின் - பிரியாவுக்கு நோ சொன்னது ஏன்? கரையேறுமா அசெம்ப்ளி கனவு?

திமுக தலைமை நிராகரித்தது ஏன்?

ஆனால், திமுகவின் வேட்பாளர்களில் பட்டியலில் மேயர் பிரியாவின் பெயர் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக திரு.வி.க. நகரில் கே.எஸ். ரவிச்சந்திரன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பல்வேறு விவகாரங்களில் மேயர் பிரியாவின் பெயர் அடிபடுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக துணை மேயர் உடனான அதிகார மோதலால்  மாநகராட்சியின் முக்கியமான கோப்புகள் மற்றும் பணிகள் தாமதமாவதாக கூறப்படுகிறது.  திமுக மேலிடம் இவர்களை சமாதானப்படுத்த முயன்றாலும், உள்ளூர் அளவில் இருவருக்கும் இடையேயான போட்டி நீடிக்கிறதாம். கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்ற மறுப்பது, படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி வேட்பாளராக களமிறங்குவது ஆகிய காரணங்களால், திரு.வி.க. நகரில் மேயர் பிரியாவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லையாம். அவரது பதவிக்காலம் இன்னும் ஓராண்டில் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
Embed widget