மேலும் அறிய

Nainar Nagendran: நெல்லைக்கு டாட்டா.. தொகுதியை மாற்றிய நயினார்.. இந்த முறை எங்கு போட்டி தெரியுமா?

Nainar Nagendran Constituency: 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியை விட்டு வெளியேறி இம்முறை வேறு தொகுதியில் போட்டியிட உள்ளார். அது பற்றிக் காணலாம்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகளின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

2026 தமிழக சட்டமன்றதேர்தல்

 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், சசிகலா - ராமதாஸ் தலைமையிலான கூட்டணி என 5 முனை போட்டியானது நிலவுகிறது. இதில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதிக்கட்சி, அமமுக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளது.

இதில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும், தமிழ் மாநில காங்கிரஸூக்கு 5 தொகுதிகளும், ஐஜேகே கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் அதிமுக கூட்டணிகள் தொகுதிகளையும் முடிவு செய்துள்ளது. 

பாஜக போட்டியிடும் தொகுதிகள்

அக்கூட்டணியில் உள்ள பாஜக மயிலாப்பூர், ⁠தளி, மொடக்குறிச்சி, ஊட்டி, அவிநாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை, ராமநாதபுரம், குளச்சல், பத்மநாதபுரம், ராசிபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் யாரெல்லாம் வேட்பாளர்களாக நிறுத்தப்படபோகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

தொகுதியை மாற்றிய நயினார் நாகேந்திரன்

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜகவுக்கு 4 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. நயினார் நாகேந்திரன், சரஸ்வதி, காந்தி, வானதி சீனிவாசன் ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர். நயினார் நாகேந்திரன் நெல்லையின் செல்லப்பிள்ளை என தொகுதி மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர். அதிமுகவில் இருந்த காலக்கட்டத்தில் இருந்தே செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்த நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியில் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

அங்கு திமுக வேட்பாளரான ஏ.எல்.எஸ். லட்சுமணனை விட 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு நயினார் தோல்வியை தழுவினார். இதற்கிடையில் தமிழக பாஜக தலைவராக பதவியேற்ற நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியை விட்டு விட்டு வேறு தொகுதியில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் கேட்டபோது எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடுவேன் என சொன்ன அவர், திருநெல்வேலி தொகுதியை விட்டு மாறும் தகவலுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் பதிலளித்தார். 

இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு திருநெல்வேலி தொகுதி ஒதுக்கப்படவில்லை. அதனால் அவர் தொகுதி மாறுவது உறுதியாகி விட்டது. சாத்தூர் தொகுதி முக்குலத்தோர் சமூக மக்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் அவர்களின் வாக்கு நயினாருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக அதிகப்பட்சமாக 8 முறை சாத்தூரில் வென்றுள்ளது. 

அதேசமயம் அதிமுகவில் இருந்து 4 முறை நெல்லை தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் 2001, 2011ல் வெற்றி பெற்றார். அதேபோல் பாஜகவில் இணைந்து போட்டியிட்டு 2021ல் வென்றார். இம்முறை நயினார் நாகேந்திரனை வீழ்த்த திமுக கடுமையான முயற்சி  மேற்கொண்டு வரும் நிலையில் அவர் தொகுதியை மாற்றியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Embed widget