மேலும் அறிய

Tiruvannamalai: திருவண்ணாமலை தொகுதிக்கு எம்.பி. அண்ணாதுரை என்ன செய்தார்..? - மக்கள் சொல்வது என்ன..?

Tiruvannamalai Lok Sabha Constituency: திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 5 ஆண்டுகளில் ஒரு திட்டத்தைக்கூட முழுமையாக செயல்படுத்தவில்லை. கொடுத்த வாக்குறுதியை எதையும் நிறைவேற்றவில்லை - பொதுமக்கள் வேதனை

திருவண்ணாமலை  மக்களவைத் தொகுதி 2024  (Tiruvannamalai  Lok Sabha Constituency 2024)

பஞ்ச பூதங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை ( tiruvannamalai  Lok Sabha constituency ) மக்களவைத் தொகுதியில் அதிக அளவில் விவசாயத்தை மட்டுமே உள்ளனர். இந்த தொகுதியில் வறட்சியின் காரணமாக இப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இதன் காரணமாக இளைஞர்கள் வேலை தேடி சென்னை, கோயம்பத்தூர், ஓசூர், திருப்பூர், பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு செல்கின்றனர்.  திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 15 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதில் வன்னியர், பட்டியலினத்தினர், முதலியார், யாதவர், பழங்குடியின மக்களும் வசித்து வருகின்றனர். திருப்பத்தூர் தொகுதியாக இருந்து வந்தது. 2008-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது திருவண்ணாமலை தொகுதி  புதியதாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது.  இதனை அடுத்து திருவண்ணாமலை  நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டு, திருவண்ணாமலை, கலசப்பாக்கம், செங்கம் (தனி), கீழ்பென்னாத்தூர், ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் திருவண்ணாமலை  நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டது.

வாக்காளர்களின் விவரம்

வ.எண்

தொகுதியின்

பெயர்

ஆண்

வாக்காளர்கள்

பெண்

வாக்காளர்கள்

மூன்றாம்

பாலின வாக்காளர்கள்

மொத்த

வாக்காளர்கள்

1 திருவண்ணாமலை  13,39,31 14,30,12 40 276,983  
2  கீழ்பென்னாத்தூர்  12,50,04 13,01,47 11 255,162

4

செங்கம் 

13,74,67

13,99,89

11

277,467

5

கலசப்பாக்கம்

122113

125855

10

247,978

6

ஜோலார்பேட்டை 

1,16,791

1,18,793

17

235,601

7

திருப்பத்தூர் 

1,13,694

1,14,873

29

228,596

மொத்தம்

749,000

772,669

118

1,521,787

வெற்றி பெற்றவர்கள்

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில், 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக  கட்சியை சேர்ந்த வேணுகோபால். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் வன ரோஜா, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை  ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

யாருடைய கோட்டை ?

திருவண்ணாமலை  மக்களவை தொகுதியில் திமுக  2 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 1 முறை வெற்றி பெற்றுள்ளது.

2019 தேர்தல் நிலவரம் எப்படி ?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், திருவண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். திமுக சார்பில் சி.என் அண்ணாதுரை போட்டியிட்டார். அவர் 6,66,272 ( 57.85 சதவீதம் ) வாக்குகளை பெற்றார். அதிமுக வேட்பாளர் எஸ்.எஸ். அக்ரி கிருஷ்ணமூர்த்தி 3,62,085 (31.44 சதவீதம் ) வாக்குகள் பெற்றார். இதில் திமுக வேட்பாளரான சி.என் .அண்ணாதுரை, அதிமுக வேட்பாளரான, எஸ்.எஸ். அக்ரி கிருஷ்ணமூர்த்தியை விட 3,04,187 வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றார்.

2021 தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள்

திருவண்ணாமலை  -  எ .வ.வேலு  ( திமுக )
கீழ்பென்னாத்தூர்  - கு.பிச்சாண்டி  ( திமுக)
செங்கம்  - மு.பே.கிரி   ( திமுக )
கலசப்பாக்கம்  -  சரவணன் ( திமுக )
ஜோலார்பேட்டை  - தேவராஜ் ( திமுக )
திருப்பத்தூர்  -  நல்லதம்பி  (திமுக)

Tiruvannamalai: திருவண்ணாமலை தொகுதிக்கு எம்.பி. அண்ணாதுரை என்ன செய்தார்..? - மக்கள் சொல்வது என்ன..?

நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை நாடாளுமன்றத்தின் செயல்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை 52 விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார். 442 கேள்விகள் எழுப்பியுள்ளார். ஒரு தனி நபர் தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளார். 78 சதவீத வருகை பதிவை வைத்துள்ளார். சென்னை - திருவண்ணாமலை -ஜோலார்பேட்டை இடையே ரயில்கள் இயக்க கோருதல், திருவண்ணாமலையில் சிறிய விமான நிலையம், பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேன்படுத்துதல், படியிலான பட்டியலில் குருமன்ஸ் இன மக்களை சேர்ப்புதல் போன்ற விவாதங்களில் பங்கேற்றுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை மீது  மக்கள், விவசாயிகளின்  கருத்து என்ன ?

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு கொடுத்த வாக்குறுதியில் எம்பி அண்ணாதுரை எதுவும் செய்யவில்லை, செங்கம் பகுதியில் பூக்கள் அதிகமாக விளைகிறது. அதற்கு சென்ட் தொழிற்சாலை கேட்டோம், வேளாண் விதை பண்ணை ஆராய்ச்சி மையம் கேட்டோம், காய்கறிகள் பதப்படுத்தும் மையம் கேட்டோம், திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் பாதை தற்போதுவரையில் கொண்டு வரவில்லை, திருவண்ணாமலை ஜோலார் பேட்டை ரயில் பாதை திட்டம் கொண்டுவரவில்லை. நந்தன்கள்வாய் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு தொழிற்சாலைகள் கொண்டு வரவில்லை, சாத்தனுர் அணை தூர்வாரவில்லை, சாத்தனுர் அணை செய்யாறு இணைந்திருக்கலாம் ஆனால் எதுவும் செய்யவில்லை, ஜவ்வாது மலை மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் இல்லை, ஜவ்வாது மலை மக்களுக்கு எந்தவித பொருளாதார கட்டமைப்பும் ஏற்படுத்தி தரவில்லை,  எம்பி அண்ணாதுரை கொடுத்த வாக்குறுதியை எதையும் நிறைவேற்றாமல் உள்ளார். மக்களின் வளர்ச்சிக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, அமைச்சர் கூறுவதை மட்டுமே மக்களுக்கு  செய்துவருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு திட்டத்தைக்கூட முழுமையாக செயல்படுத்தவில்லை என  பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர் .பல்வேறு தொகுதியில் மின்விளக்கு, பள்ளி கட்டிடங்கள், சுற்றுச்சுவர் போன்றவற்றை மட்டும்தான் செய்துள்ளார். எம்பி அண்ணாதுரை திமுக கட்சி நிகழ்ச்சிக்கு மட்டும் செல்வதற்கே நேரம் சரியாக உள்ளது. அமைச்சர் எ.வ.வேலு வெளியில் வந்தால் மட்டுமே எம்பி வெளியில் வருகிறார். மீதமுள்ள நேரத்தில் அவருடைய தொழிலை மட்டும் நன்றாக பார்த்து வருகிறார். அமைச்சரை மீறி எதுவும் செய்யமுடியாமல் தவித்து வருகிறார் என பொதுமக்கள் கூறுகின்றனர்.  

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் செய்யப்பட்ட பணிகள் குறித்து எம்பி அண்ணாதுரையிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அவர் இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பு வைப்பதாக கூறி அழைப்பை துண்டித்துவிட்டார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Fengal Cyclone LIVE: இன்று மாலை உருவாகும் ஃபெங்கல் புயல் சென்னையை நெருங்க வாய்ப்பு
Fengal Cyclone LIVE: இன்று மாலை உருவாகும் ஃபெங்கல் புயல் சென்னையை நெருங்க வாய்ப்பு
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Fengal Cyclone LIVE: இன்று மாலை உருவாகும் ஃபெங்கல் புயல் சென்னையை நெருங்க வாய்ப்பு
Fengal Cyclone LIVE: இன்று மாலை உருவாகும் ஃபெங்கல் புயல் சென்னையை நெருங்க வாய்ப்பு
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
Tamilnadu RoundUp: இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்! கடலூர், மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட்!
Tamilnadu RoundUp: இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்! கடலூர், மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட்!
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "வெற்றி மாறன்தான் வாத்தியார்.. நான் ஸ்டூடண்ட்தான்" உருக்கமாக பேசிய விஜய் சேதுபதி
Vetrimaaran: திமுகவிற்கு ஆதரவு, விஜய் மீது இவ்வளவு வன்மமா? வெற்றிமாறனின் விடுதலை 2 டிரெய்லரால் வெடித்த சர்ச்சை
Vetrimaaran: திமுகவிற்கு ஆதரவு, விஜய் மீது இவ்வளவு வன்மமா? வெற்றிமாறனின் விடுதலை 2 டிரெய்லரால் வெடித்த சர்ச்சை
Embed widget