மேலும் அறிய

Thirumavalavan: தேமுதிகவுக்கு விட்டுக்கொடுப்பது ஏன்? - திருமாவளவன் சொன்ன பரபரப்பு விளக்கம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வாக்கு வங்கி நிறைய இருக்கலாம். எங்களுக்கு 10, 12 சதவிகிதம் வாக்குகள் இருக்கிறது என சொல்லலாம். எனினும் நாங்கள் இன்னும் நிரூபிக்கவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தேமுதிக, காங்கிரஸ் கட்சிகள் வலுக்குறைந்து காணப்பட்டாலும், அந்த கட்சிகளுக்கு என ஒரு பாரம்பரியம் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என களப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படியான நிலையில் திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தமுறை கூட்டணியில் தேமுதிக சேர்ந்திருப்பதால் கடந்த 2021 தேர்தலைக் காட்டிலும் விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு குறைவான இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது அரசியல் வட்டாரத்திலும், தொண்டர்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் திருமாவளவன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றிருந்தார். 

அந்த நேர்காணலில் திமுக வாங்கும் 100 வாக்குகளில் 25 வாக்குகள் விசிகவுடையது என சொல்லும் நீங்கள், திமுக கூட்டணியில் தேமுதிக அதிக இடங்கள் வாங்கினால் பரவாயில்லை என நினைப்பது பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, “ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பாரம்பரியம் உள்ளது. காங்கிரஸூக்கு தமிழ்நாட்டில் என்ன பலம் இருக்கிறது என கேட்கிறார்கள். ஒரு தேசிய கட்சியாக பலமுறை இந்தியாவையும், சிலமுறை தமிழ்நாட்டையும் ஆட்சி செய்திருக்கிறது. அதற்கு என ஒரு பாரம்பரியம் இருப்பதால் மரியாதை கொடுக்க வேண்டியுள்ளது. 

அதேபோல் தேமுதிக தமிழ்நாட்டில் ஒருமுறை எதிர்க்கட்சியாக இடம் பிடித்தது. விஜயகாந்த் 2011ல் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அந்த அரசியல் ரீதியான அந்தஸ்து என்ற ஒன்று உள்ளது. தேமுதிக மக்கள் நல கூட்டணியில் இணைந்தபோது விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தோம். 234 தொகுதிகளிலும் அவர்கள் பெரும்பான்மையான பங்களிப்பை எடுத்துக்கொண்டார்கள்.  கூடுதலான இடங்களை எடுத்துக் கொண்டார்கள். மீதமுள்ள இடங்களை நாங்கள் ஆளுக்கு 25 தொகுதிகள் என போட்டியிட்டோம். இன்றைக்கு அவர்கள் வலுக்குறைவாகவோ அல்லது வாக்கு வங்கி குறைவாகவோ இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு என ஒரு அங்கீகாரம் உள்ளது. அதை குறைத்து மதிப்பிட முடியாது. 

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வாக்கு வங்கி நிறைய இருக்கலாம். எங்களுக்கு 10, 12 சதவிகிதம் வாக்குகள் இருக்கிறது என சொல்லலாம். அது உண்மையாக கூட இருக்கலாம். எனினும் நாங்கள் இன்னும் நிரூபிக்கவில்லை. அதனால் எங்களை விட தேமுதிகவுக்கு அதிக தொகுதி கொடுத்தாலும் பிரச்னையில்லை. 

ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தையின்போது குறைவான தொகுதி கொடுப்பது பற்றிய கருத்துகள் இருக்கும்.  கடந்த தேர்தலின்போது எத்தனை இடங்கள் பெற்று அதில் எத்தனை வெற்றி பெற்றார்கள் என்பதை வைத்து தான் பேச்சுவார்த்தை தொடங்கும். அதை வைத்து தொகுதியை முடிவு செய்வார்கள்” என திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு.. ஒருத்தரையும் விடக்கூடாது.. ஆக்‌ஷன் எடுத்தே ஆகணும்.. கனிமொழி கண்டனம்!
ஜெம் வீரமணி வழக்கு.. ஒருத்தரையும் விடக்கூடாது.. ஆக்‌ஷன் எடுத்தே ஆகணும்.. கனிமொழி கண்டனம்!
TN Weather News: 5 மாவட்டங்களுக்கு வார்னிங்? இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
5 மாவட்டங்களுக்கு வார்னிங்? இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Fishermen Alert: இன்று கடலில் எங்கெல்லாம் செல்லக்கூடாது..! Low Pressure, மீனவர்களுக்கான வானிலை மையம் எச்சரிக்கை
இன்று கடலில் எங்கெல்லாம் செல்லக்கூடாது..! Low Pressure, மீனவர்களுக்கான வானிலை மையம் எச்சரிக்கை
Chennais Elevated Metro: 6 வழி மேம்பால சாலையுடன் 23KM நீளத்திற்கு புதிய மெட்ரோ.. மஹிந்த்ரா சிட்டி டூ கிளம்பாக்கம் - விவரம்
6 வழி மேம்பால சாலையுடன் 23KM நீளத்திற்கு புதிய மெட்ரோ.. மஹிந்த்ரா சிட்டி டூ கிளம்பாக்கம் - முழு விவரம்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜெம் வீரமணி வழக்கு.. ஒருத்தரையும் விடக்கூடாது.. ஆக்‌ஷன் எடுத்தே ஆகணும்.. கனிமொழி கண்டனம்!
ஜெம் வீரமணி வழக்கு.. ஒருத்தரையும் விடக்கூடாது.. ஆக்‌ஷன் எடுத்தே ஆகணும்.. கனிமொழி கண்டனம்!
TN Weather News: 5 மாவட்டங்களுக்கு வார்னிங்? இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
5 மாவட்டங்களுக்கு வார்னிங்? இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Fishermen Alert: இன்று கடலில் எங்கெல்லாம் செல்லக்கூடாது..! Low Pressure, மீனவர்களுக்கான வானிலை மையம் எச்சரிக்கை
இன்று கடலில் எங்கெல்லாம் செல்லக்கூடாது..! Low Pressure, மீனவர்களுக்கான வானிலை மையம் எச்சரிக்கை
Chennais Elevated Metro: 6 வழி மேம்பால சாலையுடன் 23KM நீளத்திற்கு புதிய மெட்ரோ.. மஹிந்த்ரா சிட்டி டூ கிளம்பாக்கம் - விவரம்
6 வழி மேம்பால சாலையுடன் 23KM நீளத்திற்கு புதிய மெட்ரோ.. மஹிந்த்ரா சிட்டி டூ கிளம்பாக்கம் - முழு விவரம்
Mahindra Thar OG: தார் OG-யை இறக்கிய மஹிந்த்ரா..! ஒவ்வொரு வேரியண்டிற்கான விலை, இன்ஜின், அம்சங்களின் பட்டியல்
தார் OG-யை இறக்கிய மஹிந்த்ரா..! ஒவ்வொரு வேரியண்டிற்கான விலை, இன்ஜின், அம்சங்களின் பட்டியல்
Rasi Palan Today (23.09.2026): சிம்மத்துக்கு ஏமாற்றம்.. மகரத்துக்கு லாபம்.. உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (23.09.2026): சிம்மத்துக்கு ஏமாற்றம்.. மகரத்துக்கு லாபம்.. உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
EPS ADMK : 5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
Gem Veeramani : ‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
Embed widget