வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட்டீங்களா! நாளையே கடைசிநாள்; வெளியான முக்கிய அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
85 வயதான முதியவர்களிடம் வீட்டுக்கே சென்று தபால் வாக்குகள் பெறப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல்:
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி ஏப்ரல் 19 ஆம் தேதி என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தது.
நாடாளுமன்றத்தின் 18வது மக்களவை தேர்தலானது வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலானது முதல்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏற்ப 68,144 வாக்குச்சாவடிகள் உள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம். அதர்கு நாளைதான் கடைசி நாள்.
View this post on Instagram
இப்தார் நோன்பில் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கலாம்; ஆனால் வாக்கு சேகரிக்க கூடாது.
பொன்முடி அமைச்சராவாரா என்பது குறித்தான கேள்விக்கு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தேர்தல் ( ஏப்.19 ) முடிந்து, 45 நாட்களுக்கு பிறகு வாக்கு எண்ணிக்கையானது ( ஜூன்.4 ) நடைபெறும் என குறிப்பிடத்தக்கது.