மேலும் அறிய

2 முறை வாக்களிக்க முயன்ற நபர் கைது - கோவையில் பரபரப்பு

இடது கை விரலை பார்க்கும் போது, அவர் ஏற்கனவே ஒரு இடத்தில் வாக்களித்து விட்டு இரண்டாவது முறையாக வாக்களிக்க வந்தது தெரியவந்தது.

கோவை நல்லாம்பாளையம் தண்டல் முத்தாரம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் திருநாவுக்கரசு(52). இவர் ஒர்க்சாப் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதி, வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நல்லாம்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் உள்ள பூத் எண் 145ல் வாக்களிக்க சென்றுள்ளார். அப்போது கையில் மை வைக்கும் ஊழியரிடம் வலது கை ஆள்காட்டி விரலை காண்பித்துள்ளார். அப்போது அங்கிருந்து அதிகாரிகள் இடது கை விரலை பார்க்கும் போது, அவர் ஏற்கனவே ஒரு இடத்தில் வாக்களித்து விட்டு இரண்டாவது முறையாக வாக்களிக்க வந்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரி லதா மகேஸ்வரி கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் திருநாவுக்கரசை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு காந்திபுரம் மற்றும் நல்லாம்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் ஓட்டு இருப்பதாகவும், காந்திபுரம் பகுதியில் வாக்களித்து விட்டு நல்லாம்பாளையம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து திருநாவுக்கரசின் மீது 171(D)- போலியான பெயரில் வாக்களித்தல் மற்றும் 171 F(2)-  தகாத வாக்கு செலுத்துதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஸ்டார்ங் ரூம் பாதுகாப்பு ஏற்பாடுகள்

2 முறை வாக்களிக்க முயன்ற நபர் கைது - கோவையில் பரபரப்பு

கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் 582 மையங்களில் 2059 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது முதல், மாலை 6 மணி வரை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். குறிப்பாக நகர்ப்புறங்களை விட கிராமப்புற வாக்காளர்கள் வாக்களிப்பதில் அதிக ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக கிராமப்புறங்களில் வாக்குப்பதிவு அதிகரித்து காணப்பட்டது. கோவை மக்களவை தொகுதியில் மொத்தம் 64.42 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமிற்கு கொண்டு வரப்பட்டு, சட்டமன்ற வாரியாக தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி முன்னிலையில் இயந்திரங்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பாக அறைகளில் வைக்ககப்பட்டு சீல் வைக்கப்பட்டது. கல்லூரி வளாகத்தில் தமிழக காவல்துறையினரும் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டிராங் ரூம் மற்றும் கல்லூரி வளாகம் என அனைத்தும் 300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி  கண்காணிக்கப்பட்டு வருகின்றது. திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் ஆகியோர் சீல் வைக்கும் பணிகளின்போது நேரில் இருந்தனர். பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணியினை பார்வையிட வரவில்லை. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வளாகத்தை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியின் முகவர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கும் பகுதிகளில் இருப்பதற்கும், அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில், அதுவரை இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

India vs Australia LIVE SCORE: ஹிட்மேன் ரோஹித் சர்மாவின் சிக்ஸர் மழை.. உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்!
India vs Australia LIVE SCORE: ஹிட்மேன் ரோஹித் சர்மாவின் சிக்ஸர் மழை.. உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்!
NEET:
NEET: "நீட்டை ஒழிக்க வேண்டும்.. தேர்வுகளை மாநிலங்களே நடத்த வேண்டும்" திமுகவை பின்பற்றும் மம்தா!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
Sonakshi Sinha: திருமணத்திற்கு பிறகு இஸ்லாம் மதத்திற்கு மாறுவாரா சோனாக்‌ஷி? பதிலளித்த மாமனார்
Sonakshi Sinha: திருமணத்திற்கு பிறகு இஸ்லாம் மதத்திற்கு மாறுவாரா சோனாக்‌ஷி? பதிலளித்த மாமனார்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India vs Australia LIVE SCORE: ஹிட்மேன் ரோஹித் சர்மாவின் சிக்ஸர் மழை.. உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்!
India vs Australia LIVE SCORE: ஹிட்மேன் ரோஹித் சர்மாவின் சிக்ஸர் மழை.. உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்!
NEET:
NEET: "நீட்டை ஒழிக்க வேண்டும்.. தேர்வுகளை மாநிலங்களே நடத்த வேண்டும்" திமுகவை பின்பற்றும் மம்தா!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
Sonakshi Sinha: திருமணத்திற்கு பிறகு இஸ்லாம் மதத்திற்கு மாறுவாரா சோனாக்‌ஷி? பதிலளித்த மாமனார்
Sonakshi Sinha: திருமணத்திற்கு பிறகு இஸ்லாம் மதத்திற்கு மாறுவாரா சோனாக்‌ஷி? பதிலளித்த மாமனார்
வி.வி.ஐ.பி.க்காக மட்டும்தான் தெருக்களை சுத்தம் செய்யனுமா? மற்றவர்களுக்காக செய்ய கூடாதா? நீதிபதி கேள்வி!
வி.வி.ஐ.பி.க்காக மட்டும்தான் தெருக்களை சுத்தம் செய்யனுமா? மற்றவர்களுக்காக செய்ய கூடாதா? நீதிபதி கேள்வி!
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
Embed widget