Coimbatore Lok Sabha Election: ஆயிரம் ரூபாய் தரும் சூரிய கட்சிக்கு ஓட்டுப்போட முடியல - கண்ணீர் விட்டு அழுத மூதாட்டி
வாக்காளர் பட்டியலில் பெயர இல்லை என கூறி வாக்களிக்க முடியாது என வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த மூதாட்டி தனது வாக்கினை செலுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுத நிலையில் சென்றார்.
கோவை சுகுணாபுரம் பாலமுருகன் கோயில் வீதியை சேர்ந்தவர் குர்சித் பீவி(60). இவர் சுகுணாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்கு தனது வாக்கினை செலுத்த வந்தார். இந்நிலையில், அவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் பெயர இல்லை என கூறி வாக்களிக்க முடியாது என வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த மூதாட்டி தனது வாக்கினை செலுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுத நிலையில் சென்றார். இது குறித்து மூதாட்டி கூறுகையில், நான் உயிருடன் இருக்கும் நிலையில் எனக்கு வாக்கு இல்லை என கூறுகின்றனர்.
எனது கணவர் இறந்து தனிமையில் வாழ்ந்து வருகிறேன். கடந்த தேர்தலில் இங்கு தான் எனது வாக்கினை செலுத்தினேன். ஆனால், இந்த முறை எனக்கு வாக்கு இல்லை. வாக்கு செலுத்த முடியாது என கூறுகின்றனர். தமிழ்நாடு முதல்வரின் பெண்களுக்கான மகளிர் உரிமை தொகையை ரூ.1000 பெற்று வருகிறேன். இது எனக்கு பெரும் உதவியாக உள்ளது. மகளிர் உரிமை தொகை மட்டுமே எனக்கு ஆறுதல் அளித்து வருகிறது. இந்நிலையில், எனது நன்றி கடனை செலுத்த இன்று வாக்களிக்க வந்தேன். ஆனால், வாக்கு செலுத்த முடியவில்லை. இது மிகவும் வேதனையாக இருக்கிறது. உயிருடன் இருக்கும் எனக்கு எப்படி வாக்கு இல்லாமல் போனது என் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு ஆண் வாக்காளர்கள் 7,71,53 பேர், பெண் வாக்காளர்கள் 8,21,370 பேர், மூன்றாம் பாலினத்தவர் 295 பேர் என மொத்தம் 15,93,168 வாக்காளர்கள் உள்ளனர். பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் ஒன்பது சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் திமுகவை சேர்ந்த ஈஸ்வரசாமி, அதிமுகவை சேர்ந்த கார்த்திகேயன், பாஜகவை சேர்ந்த வசந்தராஜன் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.