மேலும் அறிய

TVK Vijay: இரட்டை இலக்கத்தில் தவெக! ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியா விஜய்? எக்ஸிட் போல் முடிவுகள்

Tamil Nadu Exit Poll Results 2026: தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகளின்படி விஜய்யின் தவெக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Exit Poll Results 2026: தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23ம் தேதி நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்தியாவின் பல்வேறு முன்னணி தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனங்களும் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் திமுக-வே ஆட்சியைப் பிடிக்கும் என்று கணித்துள்ளனர்.

இரட்டை இலக்கத்தில் தவெக:

இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தவர் தவெக தலைவர் விஜய். திரையுலக புகழ் மூலமாக தவெக-வைத் தொடங்கிய விஜய் முதல் தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துவார்? அவர் அரசியல் வாழ்வு எப்படி அமையப்போகிறது? என்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் அவர் மீது இருந்து வருகிறது.

234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட விஜய் இந்த தேர்தலில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார் என்று கணிக்கப்பட்டது. தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் அதையே உறுதி செய்துள்ளது. இந்த தேர்தலில் தவெக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும் என்று ஒவ்வொரு கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ளது. இது தவெக-வினருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. மற்ற அரசியல் கட்சியினருக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

என்டிடிவி - பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பின்படி, தமிழக வெற்றிக் கழகம் 18 முதல் 24 தொகுதிகளை தமிழ்நாட்டில் கைப்பற்றும், மேட்ரிஸ் தவெக 10 முதல் 12 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், ரி பப்ளிக் - பி மார்க் தவெக 16 முதல் 26 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ்ட் 13 முதல் 26 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கணித்துள்ளனர். டைம்ஸ் நவ் மற்றும் ஜேவிசி தவெக 8 முதல் 15 இடங்களை கைப்பற்றும் என்று கணித்துள்ளது.

விஜய் கட்சி தொடங்கியபோது விசிக-விற்கு கூட்டணிக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். ஆனால், திருமாவளவன் திமுக கூட்டணியில் நீடிப்பதில் உறுதியாக இருந்து தேர்தலை எதிர்கொண்டுள்ளார். பின்னர், காங்கிரசுடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. 

மிகுந்த எதிர்பார்ப்பு:

இந்த சூழலில், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டுள்ள விஜய் இந்த தேர்தலில் எத்தனை சதவீதம் வாக்குகள் பெறுவார்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்தது. அவர் மட்டுமே வெற்றி பெறுவார் என்று தொடக்கத்தில் பலரும் கருத்துக்கள் தெரிவித்த நிலையில், கருத்துக்கணிப்பின் முடிவிலே தவெக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டு இருப்பது தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையே உண்டாக்கியுள்ளது. 

விஜய்க்கு பெரும்பாலான முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் பெண்கள் வாக்களித்துள்ளனர் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மேலும், முதியவர்கள் ஆகியோரின் வாக்குகளும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் இந்த தேர்தலில் பெறும் வாக்கு சதவீதம் ஆட்சியை அமைக்கப்போவது யார்? என்பதையும் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தவெக-வை விஜய் எப்படி வழிநடத்துகிறார்? என்பதைப் பொறுத்தே அவரது மற்றும் தவெக-வின் அரசியல் எதிர்காலம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Exit Poll Results 2026 LIVE: தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மே.வங்கம், அசாமில் ஆட்சியை பிடிப்பது யார்? உடனடி அப்டேட்ஸ்!

தலைப்பு செய்திகள்

கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget