TN Election Voting Percentage: போட்டுத் தாக்கும் வாக்குப்பதிவு; முன்னெப்போதும் இல்லாத வகையில் சரமாரி அதிகரிப்பு- 3 மணி நிலவரம்- முழு லிஸ்ட்!
TN Election 2026 Voter Turnout 3 PM Update: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரம் வெளியாகி உள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

தமிழ்நாட்டுக்கான 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மதியம் 3 மணி வாக்குப் பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது. கடந்த தேர்தலைகளை விட முன்னெப்போதும் இல்லாத வகையில், வாக்குப் பதிவு சதவீதம் மளமளவென அதிகரித்துள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கே 17.69 சதவிகிதம் பேர் வாக்களித்தனர். அடுத்த இரண்டு மணி நேரத்தில், 11 மணிக்கு இந்த வாக்கு சதவிகிதமானது 37.56 சதவிகிதமாக அதிகரித்தது. பின்பு 1 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 56.81 சதவிகித வாக்குகள் பதிவாகின. 11 மணிக்கு பிறகு 17.2 சதவிகித வாக்குகள் பதிவாகின.
இந்த நிலையில் 3 மணி நிலவரம் வெளியாகி உள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் வழக்கம்போல மேற்கு மண்டல மக்களே அதிகபட்ச வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், மாவட்ட வாரியான வாக்குப் பதிவு இதோ!
- அரியலூர் - 68.97 %
- செங்கல்பட்டு - 69.46 %
- சென்னை - 68.13 %
- கோவை - 71.16 %
- கடலூர் - 68.53 %
- தர்மபுரி - 74.68 %
- திண்டுக்கல் - 74.31 %
- ஈரோடு - 75.61 %
- கள்ளக்குறிச்சி - 71.11%
- காஞ்சிபுரம் - 72.51 %
- கன்னியாகுமரி - 61.91%
- கரூர் - 76.08 %
- கிருஷ்ணகிரி - 70.07 %
- மதுரை - 67.15 %
- மயிலாடுதுறை - 65.80 %
- நாகப்பட்டினம் - 69.98 %
- நாமக்கல் - 76.43 %
- பெரம்பலூர் - 70.54 %
- புதுக்கோட்டை - 69.85 %
- ராமநாதபுரம் - 63.14 %
- ராணிப்பேட்டை - 72.46%
- சேலம் - 75.79 %
- சிவகங்கை - 64.74 %
- தென்காசி - 67.14 %
- தஞ்சாவூர் - 66.65 %
- நீலகிரி - 63.67 %
- தேனி - 67.68 %
- திருவள்ளூர் - 68.07 %
- திருவாரூர் - 68.43 %
- தூத்துக்குடி - 65.18 %
- திருச்சி - 71.05 %
- திருநெல்வேலி -62.84 %
- திருப்பத்தூர் - 71.46%
- திருப்பூர் - 75.38 %
- திருவண்ணாமலை - 72.19 %
- வேலூர் - 71.23 %
- விழுப்புரம் - 71.65 %
- விருதுநகர் - 70.24 %
எங்கு அதிகம், எங்கு குறைவு?
மேற்கு மண்டலங்களில் வாக்குப் பதிவு அதிகமாக இருந்த நிலையில், தற்போது நாமக்கல் மாவட்டம் 76.43 சதவீத வாக்குப் பதிவுடன் முதல் இடத்தில் உள்ளது. குமாரபாளையம் தொகுதியில் 80 சதவீத வாக்காளர்கள், தங்களின் வாக்குகளைச் செலுத்தி உள்ளனர். அதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 61.91% வாக்குகளை மட்டுமே அங்குள்ள மக்கள் செலுத்தி உள்ளனர். கிள்ளியூர் தொகுதியில் மிகவும் குறைவாக 57.64 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.
வாக்குப் பதிவு 90 சதவீதத்தை எட்டுமா?
கடந்த 2021 தேர்தலில் ஒட்டுமொத்தமாகவே 76.6 சதவீத வாக்காளர்கள் வாக்களித்திருந்த நிலையில், இப்போது பிற்பகல் 3 மணிக்கே 70 சதவீத வாக்குப் பதிவு வந்துள்ளது. இந்த நிலையில் வாக்குப் பதிவு 90 சதவீதத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன காரணம்?
இதற்கு எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீவிரத் திருத்தத்தால் இரட்டை, போலி வாக்காளர்கள் நீக்கம் மற்றும் தவெக தலைவர் விஜய் வாக்களிக்குமாறு விடுத்த வேண்டுகோள் ஆகியவை காரணமாகக் கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்




















