மேலும் அறிய

TN Election 2026: வேட்பாளர்களே தயாரா? மார்ச் 30 முதல் மனுத் தாக்கல்: 4 நாட்கள் விடுமுறை - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மார்ச் 30-ஆம் தேதி முதல் வேட்பாளர்கள் தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மார்ச் 30-ஆம் தேதி முதல் வேட்பாளர்கள் தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரம் மற்றும் காலக்கெடு

தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும் நாளான 30.03.2026 (திங்கட்கிழமை) முதல் வேட்புமனுக்கள் பெறப்படும். மனுக்களைத் தாக்கல் செய்ய விரும்புவோர் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை உரிய தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுக்களைச் சமர்ப்பிக்கலாம். வேட்புமனுத் தாக்கல் செய்யக் கடைசி நாள் 06.04.2026 (திங்கட்கிழமை) ஆகும்.

தொடர் விடுமுறைகளால் 4 நாட்கள் மனுத் தாக்கல் கிடையாது

மாற்றுச்சீட்டுச் சட்டம் 1881-ன் கீழ் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ள நாட்களில் வேட்புமனுக்கள் பெறப்படமாட்டாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி:

  • மார்ச் 31 (செவ்வாய்)
  • ஏப்ரல் 01 (புதன்)
  • ஏப்ரல் 03 (வெள்ளி)
  • ஏப்ரல் 05 (ஞாயிறு)

இந்த  நான்கு நாட்கள் அரசு விடுமுறை என்பதால், அன்று மனுத் தாக்கல் செய்ய இயலாது.

குறிப்பு: விடுமுறை நாட்களைத் தவிர்த்து இடைப்பட்ட வேலைநாட்களிலும், இறுதி நாளான ஏப்ரல் 6-ஆம் தேதியும் மட்டுமே வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்ய முடியும் என்பதால், அரசியல் கட்சியினரும் சுயேச்சை வேட்பாளர்களும் திட்டமிட்டுச் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொகுதி பங்கீடு: 

தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பணிகள், சூடு பறக்க நடந்து வருகின்றன. இதற்கிடையே திமுக, அதிமுக, நாதக, தவெக ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக தரப்பில் தொகுதி பங்கீடு ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில் வேட்பாளர்களை விரைவில் அறிவிக்கும் என்று  எதிர்ப்பார்க்கபடுகிறது. 

இதற்கிடையில் அதிமுக முதன்முதலாக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் வெளியிட்டு, தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி உள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் பாஜக போட்டியிடும் நிலையில், அங்கு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளார். இதற்கிடையே 234 தொகுதிகளில், கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களை அதிமுக வெளியிட்டுள்ளது. 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

தேர்தல் நிலவரம் : தாராபுரம், மதுராந்தகத்தில் முன்னிலை; மதுரையில் பட்டாசு மழை!
தேர்தல் நிலவரம் : தாராபுரம், மதுராந்தகத்தில் முன்னிலை; மதுரையில் பட்டாசு மழை!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தவெக vs திமுக vs அதிமுக: மதுராந்தகம் இடைத்தேர்தலில் 7 சுற்றுகள் முடிவில் வாக்கு நிலவரம் என்ன?
தவெக vs திமுக vs அதிமுக: மதுராந்தகம் இடைத்தேர்தலில் 7 சுற்றுகள் முடிவில் வாக்கு நிலவரம் என்ன?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
Embed widget