மேலும் அறிய

12th Supplementary Exam Date: 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியா? .. துணைத்தேர்வு தேதி, விண்ணப்பிக்கும் நாள் அறிவிப்பு!

12th Supplementary Exam Date 2026 Tamilnadu: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கான துணைத்தேர்வுகளுக்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மே 18 முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கான துணைத்தேர்வுகளுக்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

கடந்த மார்ச் 2 ஆம் தேதி முதல் மார்ச் 26ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தமாக 7 லட்சத்து 91 ஆயிரத்து 651 பேர் எழுதினார்கள். இதில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 694 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவியர்கள் 4,18,724 பேரும், மாணவர்கள் 3,72,930 பேரும் அடங்குவர். மாணவர்களை விட மாணவியர்கள் 3.81% அதிகம் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

கடந்த ஆடை விட தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 0.17 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 489க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை 16,024 ஆக உள்ளது. அதேபோல் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 1,695 ஆக உயர்ந்துள்ளது. 

2026ம் ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை 8,855 மாற்றுத்திறனாளி மாணாக்கர்கள் எழுதிய நிலையில் அதில் 6,811 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 250 சிறைவாசிகள் தேர்வு எழுதிய நிலையில் அதில் 238 பேர் தேர்ச்சி கண்டுள்ளனர். தனித்தேர்வர்கள் 25,521 பேர் 12ம் வகுப்பு தேர்வெழுதிய நிலையில் 6,171 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 

tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in  ஆகிய வலைத்தளங்கள் மூலம் இந்த தேர்தல் முடிவுகளை நாம் அறிய முடியும். மேலும் DigiLocker தளத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அதேசமயம் வாட்ஸ்அப் மூலம் 845252525 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்வதன் மூலம் தேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணிற்கு மெசெஜ் மூலம் மதிப்பெண் விவரம் அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த முறை 12ம் வகுப்பு தேர்வில் 37,960 பேர் தோல்வியடைந்துள்ளனர்.  இந்த தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் ஜூன் 29ம் தேதி முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் ஜூலை 7ம் தேதிக்குள் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் ஆன்லைன் வழியாக சமர்பிக்க வேண்டும் எனவும், அதற்கான கால அவகாசம் மே 18ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

நேரம் சரியில்லை.. சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டிகே.சிவக்குமார் திடீர் பல்டி
நேரம் சரியில்லை.. சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டிகே.சிவக்குமார் திடீர் பல்டி
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நேரம் சரியில்லை.. சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டிகே.சிவக்குமார் திடீர் பல்டி
நேரம் சரியில்லை.. சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டிகே.சிவக்குமார் திடீர் பல்டி
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Embed widget