மேலும் அறிய

Sundar C: தேர்தல் களத்தில் குதித்த சுந்தர்.சி.. எந்த கட்சி சார்பில், எந்த தொகுதியில் போட்டி? 

மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் ஆக திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் சுந்தர்.சி. சன் ஆஃப் சிதம்பரம் பிள்ளை நிறுத்தப்படுகிறார்.

நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி., புதிய நீதிக் கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் மதுரை மத்தியத் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதிக்கு கீழ்க்கண்ட வேட்பாளரை முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது.

சுந்தர்.சி. சன் ஆஃப் சிதம்பரம் பிள்ளை

மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக, திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனர், நடிகருமான சுந்தர்.சி. சன் ஆஃப் சிதம்பரம் பிள்ளை நிறுத்தப்படுகிறார்.

30.3.2026 திங்கட்கிழமை அன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில், புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி மற்றும் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது. இரண்டாவது வேட்பாளரை சென்னையில் திங்கட்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிமுகப்படுத்த உள்ளோம்’’ என்று ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

குஷ்பு வாழ்த்து

இதற்கு நடிகையும் சுந்தர்.சி.யின் மனைவியுமான குஷ்பு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அவர் (சுந்தர்.சி.) அரசியலுக்கு வந்து விட்டார். தனது தந்தை சிதம்பரம் பிள்ளை மற்றும் 94 வயது தாய் தெய்வானை சிதம்பராம் பிள்ளை ஆகியோரின் ஆசியுடன் உங்களின் ஆதரவைக் கோருகிறோம்.

அவருடைய துணைவியாகிய நான், பெருமிதத்துடன் பூரித்து நிற்கிறேன். கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழக மக்களை மகிழ்வித்து வரும் அவர், இன்று தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியவர்களுக்குத் தனது சிறந்த பங்களிப்பை வழங்குவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

உங்கள் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் நாங்கள் பணிவுடன் கோருகிறோம். மதுரை மக்களே, அவர் வருகிறார்’’ என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி

தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி இணைந்து போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், உள் ஒதுக்கீடாக புதிய நீதிக் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

அதில் ஒரு தொகுதியாக மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக கூட்டணியின் கீழ், புதிய நீதிக்கட்சி சார்பில் சுந்தர்.சி. வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Embed widget