மேலும் அறிய

Seeman: ஊழல், லஞ்சத்தில் வாழ ஆசையா? அதிமுக, திமுகவா? மாற்றமா? - ஆம்பூரில் சீமான் பேசியது என்ன?

பைந்தமிழ் ஆட்சியில், என்னென்ன மாறுதலை செய்ய காத்திருக்கின்றேன், ஒரு ஓட்டு 5 ஆண்டுகளில் உலக தரத்திற்கு மாற்றுவேன் - சீமான்

“லஞ்சம், ஊழலில் வாழும் ஆசை இருந்தால், அதிமுக, திமுகவிற்கு வாக்களியுங்கள், மாறுதல் வேண்டும் என்றால், எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள்” என ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள புறவழிச்சாலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பேராசிரியை அப்சியா நஸ்ரின், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முருகேசன் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

நாட்டின் புற்றுநோயாக ஊழல், லஞ்சம்

அப்பொழுது பேசிய சீமான், “கஷ்டங்களிலும், தவிர்க்க முடியாத சூழலில் மக்களை நிறுத்தி விட்டு, தேர்தல் நேரத்தில், இலவச திட்டங்களை அறிவித்து, அதன் மூலம் வாக்கு வாங்கி, அதிகாரிகத்திற்கு வந்து, மக்களை பற்றி சிந்திக்காமல், பணத்தை பதுக்குவதில் குறியாக இருந்தவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள். நாட்டின் புற்றுநோயாக உள்ள ஊழல், லஞ்சம், அரசுடைமையாக்கப்பட்ட நாட்டில் வாழ்கின்றோம். ஊழல் லஞ்சத்தை, அழிக்கமுடியாமல் நேர்மையான ஆட்சியாளர்களாக நாட்டில்  இருந்தார்கள். ஊழல், லஞ்சம் வாங்காதவன், பிழைக்க தெரியாதவன் என பேசும் நிலை உள்ளது.

நீரை உறிஞ்சி விற்கிறார்கள் அதை தடுக்க முடியும், மரம் தான் உயிர், நான் வந்தால், 10 ஆண்டுகள் பசுமை திட்டம். வனக்கொள்ளை, மலையை வெட்டினால் அதனை சரிசெய்ய முடியாது, மணலை திருடிவிட்டால், அதனை திரும்ப பெற முடியாது, 34 ஆறுகளை கொன்று புதைத்துவிட்டார்கள், மலையை கொள்ளையடிக்கும் சமூகம், இந்த சமூகம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எப்படி ஆட்சி இருக்கும் என்பதை, 422 பக்க புத்தகங்களாக கொடுத்துக்கொண்டிருக்கின்றோம்.

குடிக்கவைத்து கொன்று கொண்டு இருக்கிறார்கள்

சமமான கல்வி, தூய்மையான தண்ணீர், சிறந்த மருத்துவம் நாங்கள் கொடுப்போம்,  இதனால் பணச்செலவு குறைகிறது. இலவசமாக தங்கம் தரமாட்டேன், அதற்கான வேலைவாய்ப்பை தருவேன், குழந்தைகளுக்கு மோதிரம் தர மாட்டேன்,  இலவசமாகவும், உயர்தர சிகிச்சை அளித்தால், அவனே தங்கம் வாங்கிகொள்வான். தடையின்றி பயோகேஸ் உற்பத்தி செய்து நானே தருவேன். விஷத்தை சாப்பிடுகிறார்கள், அதனை தடுத்து இயற்கை வேளாண்மை முறையில் நஞ்சில்லா உணவை தருவேன்.

கழுதை வளர்ப்பேன், கழுதை வளர்ப்பை பற்றி அறிவார்ந்தவர்கள் தேடுங்கள், கத்திக்கொண்டிருக்கும் நான் பைத்தியமா? அதை கேட்டுச்செல்லும் நீங்கள் பைத்தியமா?  குடிக்கவைத்து கொன்று கொண்டு இருக்கிறார்கள். தாலிக்கு தங்கம் கொடுத்து அதனை டாஸ்மாக் மூலம் அறுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அனைவருக்கும், நிலமும், வளமும், சார்ந்து அரசு வேலை.

 கையேந்தி நிற்பது, ஓட்டுக்காக இல்லை நாட்டுக்காக

குழந்தையை பெற்றுக்கொடுங்கள், எங்களுடைய அரசு படிக்க வைக்கும், மருத்துவத்தை உலக தரத்திற்கு செய்யும், பசி என்ற சொல்லை நாட்டில் ஒழிப்பேன், பைந்தமிழ் ஆட்சியில், என்னென்ன மாறுதலை செய்ய காத்திருக்கின்றேன், ஒரு ஓட்டு 5 ஆண்டுகளில் உலக தரத்திற்கு மாற்றுவேன். ஊழல், லஞ்சத்தில் வாழும் ஆசை இருந்தால், அதிமுக, திமுகவிற்கு வாக்கு அளியுங்கள், மாறுதல் வேண்டும் என்றால் எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள், கையேந்தி நிற்பது, ஓட்டுக்காக இல்லை நாட்டுக்காக அநீதிக்கு எதிராக வாக்கு அளியுங்கள். எளியவர்களிடம் அதிகாரம்தான் உங்கள் அதிகாரம், வேட்பாளரை நிறுத்தவில்லை, ஒரு போர்களத்தில், முன்கள போராளியை நிறுத்தியுள்ளேன்” என பேசி, இறுதியாக பாடல்பாடி வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.

தலைப்பு செய்திகள்

Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget