மேலும் அறிய

புதுச்சேரியில் டிரோன் கண்காணிப்பு: பணம் பட்டுவாடா செய்த 5 பேர் சிக்கினர்! தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை!

புதுச்சேரி: புதுச்சேரியில் டிரோன் மூலமாக கண்காணித்ததில் பணப்பட்டுவாடா செய்ததாக 5 பேர் சிக்கினர்.

புதுச்சேரி: புதுச்சேரியில் டிரோன் மூலமாக கண்காணித்ததில் பணப்பட்டுவாடா செய்ததாக 5 பேர் சிக்கினர். உங்கள் தொகுதியில் பணம் பட்டுவாடா செய்தால் 1950 ஜீரோ என்ற கட்டணம் இல்லாத தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாமென தேர்தல் அதிகாரி ஜவகர் தெரிவித்துள்ளார்

புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் முதன்முறையாக 'டிரோன்' (Drone) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிரடி வேட்டையைத் தொடங்கியுள்ளது.

டிரோன் கேமராவில் சிக்கிய புள்ளிகள்

புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள 30 தொகுதிகளிலும் தலா ஒரு டிரோன் வீதம் மொத்தம் 30 டிரோன்கள் நேற்று முதல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த நவீனக் கண்காணிப்பின் மூலம் மண்ணாடிப்பட்டு மற்றும் மங்கலம் தொகுதிகளில் பணப்பட்டுவாடா செய்த 5 பேர் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர்.

மண்ணாடிப்பட்டு தொகுதி: திருக்கனூர் பகுதியில் டிரோன் மூலம் கண்காணிக்கப்பட்டபோது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் செயல்பட்ட திருமாறன் (36), சிலம்பரசன் (34), மற்றும் டிவின் சக்ரவர்த்தி (30) ஆகிய மூன்று பேரைப் பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைத்திருந்த ரூ. 55,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மங்கலம் தொகுதி: முதல்வர் ரங்கசாமி போட்டியிடும் முக்கியத்துவம் வாய்ந்த மங்கலம் தொகுதியில், பறக்கும் படை அதிகாரி லோகநாதன் தலைமையிலான குழுவினர் டிரோன் உதவியுடன் சோதனையிட்டனர். அப்போது ராஜேந்திரன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவர் பணப்பட்டுவாடா செய்தபோது பிடிபட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 11,300 பறிமுதல் செய்யப்பட்டு, வில்லியனூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் எச்சரிக்கை

இது தொடர்பாக புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"புதுச்சேரி தேர்தல் துறை தொழில்நுட்ப ரீதியாகத் தன்னை மேம்படுத்திக் கொண்டுள்ளது. டிரோன் கேமராக்கள் மூலம் சந்து பொந்துகள் வரை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்காளர்களைக் கவர சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்."

பொதுமக்கள் புகார் அளிக்க அழைப்பு : தேர்தல் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப் பின்வரும் வசதிகளைப் பயன்படுத்தலாம்:

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1950

செயலி: சி-விஜில் (cVIGIL) மொபைல் ஆப்

நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தலை உறுதி செய்ய பொதுமக்கள் தங்களுக்குத் தெரியும் முறைகேடுகளை அச்சமின்றித் தெரிவிக்கலாம் எனத் தேர்தல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Minister Ramesh: கதறும் உதயநிதி.. சேகர்பாபு புலனாய்வு புலியா.. வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
Minister Ramesh: கதறும் உதயநிதி.. சேகர்பாபு புலனாய்வு புலியா.. வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
TN Govt: ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?
ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?
TN Weather News: சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: கதறும் உதயநிதி.. சேகர்பாபு புலனாய்வு புலியா.. வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
Minister Ramesh: கதறும் உதயநிதி.. சேகர்பாபு புலனாய்வு புலியா.. வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
TN Govt: ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?
ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?
TN Weather News: சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Embed widget