மேலும் அறிய

Lok Sabha Elections 2024: ரங்கசாமி டம்மி; புதுச்சேரி நிர்வாகத்தை சீர்குலைத்த பாஜக: முதலமைச்சர் ஸ்டாலின் சரமாரி தாக்கு

Lok Sabha Elections 2024 : புதுச்சேரிக்கு ஒரு சட்டமன்றம் கட்டும் உரிமைகூட இல்லை, புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இருக்கிறதா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் (07-04-2024), புதுவையில் நடைபெற்ற 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு, இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி  வேட்பாளர் வைத்திலிங்கம் அவர்களை ஆதரித்து, எழுச்சியுரை ஆற்றினார்.

கடல் அழகும் –இயற்கை அழகும் கொஞ்சும் எழில்மிகு புதுச்சேரி

”பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!” என்று தமிழர் ஒற்றுமைக்கு போர்ப்பரணி பாடிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மண்ணிற்கு நான் வந்திருக்கிறேன்! பிரெஞ்சு - இந்திய விடுதலைக்காகசிறைவாசம் அனுபவித்து, இந்த மக்களின் உரிமைக்காக தன் வாழ்நாள் முழுவதும் குரல்கொடுத்தவிடுதலை இயக்கத் தளபதி மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்கள் போற்றிப் பாதுகாத்த புதுச்சேரி மண்ணிற்கு வந்திருக்கிறேன். கடல் அழகும் –இயற்கை அழகும் கொஞ்சும் எழில்மிகு புதுச்சேரிக்கு வந்திருக்கிறேன்.

வாக்கு சேகரிப்பு 

புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக -இந்தியா கூட்டணி வேட்பாளராக வைத்திலிங்கம் அவர்கள் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். வைத்திலிங்கம் அவர்களுக்குப் புதுச்சேரியில் அறிமுகம் தேவையில்லை, மக்கள் பணியாற்றி புதுச்சேரியின் உயர்வுக்காகப் பாடுபட்டு, உங்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர், விடுதலைப் போராட்ட வீரரின் குடும்பத்தைச் சேர்ந்த இவர், இப்போது இரண்டாம் விடுதலைப் போராட்டத்தில் வேட்பாளராக, உங்கள் முன்னால் இருக்கிறார். நாற்பது ஆண்டுகளாகக் காங்கிரஸ் பேரியக்கத்தில் பயணிப்பவர். எட்டு முறை சட்டமன்ற உறுப்பினர். அதில், எதிர்க்கட்சித் தலைவராக –அமைச்சராக -சட்டப்பேரவைத் தலைவராக -இரண்டு முறை முதலமைச்சராக என்று பழுத்த அரசியல் அனுபவத்திற்குச் சொந்தமான இவர்,இரண்டாம் முறையாக நாடாளுமன்றத்திற்குச் செல்ல உங்களின் ஆதரவைக் கேட்டு வந்திருக்கிறார். வைத்திலிங்கம் அவர்களுக்குக் கை சின்னத்தில் வாக்களித்து, சென்ற தேர்தலை விட அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்கவேண்டும். வெற்ற பெற வைப்பீர்களா? நீங்கள் வாக்களிப்பது மட்டுமல்ல, இந்த ஸ்டாலினின் தூதுவனாக - உங்கள் பகுதியில் இருக்கும் மக்களிடமும் வாக்கு கேட்கவேண்டும். கேட்பீர்களா?

புதுச்சேரியின் முன்னேற்றத்திற்காகக்காங்கிரஸ் பேரியக்கமும் -திராவிட முன்னேற்றக் கழகமும்தான் பாடுபட்டிருக்கிறது. புரட்சிகரத் திராவிட இயக்கத்தையும் - புதுவையையும் பிரிக்க முடியாது. திராவிட இயக்கக் கவிஞரான பாரதிதாசனைத் தந்தமண் இது! தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணாவின் ‘ஆரிய மாயை’ தடைசெய்யப்பட்டபோது, அதைத்துணிச்சலாக கவிஞர் புதுவை சிவம் வெளியிட்ட மண் இது! தலைவர் கலைஞரின் அரசியல் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய மண், இந்த புதுச்சேரி!அதனால் தலைவர் கலைஞருக்கு தமிழ்நாடும் - புதுச்சேரியும் ஒன்றுதான்!அதே உணர்வுடன்தான், இந்த ஸ்டாலினும்- புதுச்சேரி மக்கள்மீதுதனிப்பாசம் கொண்டவன்.அந்தஅடிப்படையில்தான்சிவா,சிவக்குமார்,நாஜீம்என்று இங்கு இருக்கும் திராவிடமுன்னேற்றக் கழக உடன்பிறப்புகளும், இந்தப் புதுச்சேரி மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுகிறார்கள். அந்த உரிமையோடுதான், உங்களிடம் நான் வாக்கு கேட்க வந்திருக்கிறோம்.

புதுச்சேரியின் வளர்ச்சிக்குத் தி.மு.க.வும் – காங்கிரசும் பாடுபட்டால், புதுச்சேரியை எப்படியெல்லாம் பின்னோக்கிக் கொண்டு செல்லலாம் என்று பா.ஜ.க. செயல்படுகிறது! இதைப் புதுச்சேரிமக்கள் தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகிறீர்கள். இங்கு நம்முடைய வேட்பாளராக இருக்கும் வைத்திலிங்கம் அவர்கள் சட்டப்பேரவைத் தலைவராக இருந்தபோது, அவருடன் மோதினார்கள் ஒரு துணைநிலை ஆளுநர்.பா.ஜ.க.வின் கட்சிப்பொறுப்பில் இருக்கிறவர்களைப் புதுச்சேரி சட்டமன்றத்தில் நியமன உறுப்பினராக போட்டு,சட்டமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கினார், ஒருதுணைநிலை ஆளுநர்!அதுமட்டுமல்ல, ஆட்சியில் இருந்த அரசையே புறக்கணித்துவிட்டு, அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்கள். மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்துதராமல்,அந்த வசதிகள் இல்லை என்று காரணம் காட்டிரேஷன் அரிசியைத் தடை செய்தார்கள்.

புதுச்சேரி நிர்வாகத்தைச் சீர்குலைத்தது பா.ஜ.க

புதுச்சேரியில் பொங்கலுக்கு தரும்,வேட்டி-சேலை, இலவச அரிசி எல்லாம்எதற்கு என்று கேள்வி கேட்டார்கள். இப்படி செய்தவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக இருந்த நம்முடையநாராயணசாமி அவர்களுக்கு ஒத்துழைக்காமல் அரசியல்சட்டக் கடமையைக் காற்றில் பறக்கவிட்டு, புதுச்சேரி நிர்வாகத்தைச் சீர்குலைத்தது பா.ஜ.க.! இப்படி செயல்பட்டது யார் என்றால், துணைநிலை ஆளுநராக இருந்த அம்மையார் கிரண் பேடி அவர்கள்! ஐ.பி.எஸ்.ஆக இருந்தவர்அவர்!சட்டத்தை நிலைநாட்ட போலீசாக வேலை பார்த்த அவரே, துணைநிலைஆளுநராக அரசியல்சட்டத்தை மீறி செயல்பட்டார்.

அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும்

இப்படி, தமிழ்நாட்டிலும் ஒருஆளுநர் இருக்கிறார்.அவரும் ஐ.பி.எஸ்.ஆக இருந்தவர்தான்.நான் பல நேரங்களில் சொல்வதுண்டு, அவர் தொடர்ந்து இருக்கட்டும். அவர் இருந்தால், தி.மு.க.விற்கு அங்கு பெரிய பிரச்சாரமே நடந்து கொண்டிருக்கிறது. காவல்துறையில் பதவிக்காலம் முடிந்ததும் இவர்களை எல்லாம் ஆளுநர்களாக்கி, அரசியல்சட்டத்தை மீறி பா.ஜ.க.வின் ஏஜெண்டுகள் போன்று விளம்பரத்திற்காகவே செயல்படுகிறார்கள். இப்படி ஆளுநர்கள்தொல்லை கொடுப்பது,எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும்தான் என்று நினைக்காதீர்கள்! அதிலும் புதுச்சேரி விதிவிலக்கு.இங்கு ஆளும் பா.ஜ.க. கூட்டணி கட்சிமுதலமைச்சர் ரங்கசாமிக்கும் ஏகப்பட்ட நெருக்கடி! பா.ஜ.க.வைப் பொறுத்தவரைக்கும்,புதுச்சேரியின்முன்னேற்றம் - மக்களின் வளர்ச்சி இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும்; அதற்கு என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். இதுதான்பா.ஜ.க.வின் கொள்கை!

தமிழ்நாடு போன்று மாநிலமாக இருந்தால் அதை முனிசிபாலிட்டியாக மாற்ற வேண்டும். புதுச்சேரி போன்று யூனியன் பிரதேசமாக இருந்தால் கிராமப் பஞ்சாயத்து போன்று ஆக்கிடவேண்டும்! ஒட்டுமொத்தமாக எல்லோரும் தில்லிக்குக் கீழ் இருக்கவேண்டும்! இதுதான் பா.ஜ.க.வின் அஜெண்டா! அதனால்தான், கூட்டணி அரசு இருந்தாலும்,புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்காமல் தன்னுடைய கைப்பிடியிலேயே வைத்திருக்கிறது பா.ஜ.க.அவர்களுக்கு கைப்பாவையாக இருக்கிறார் புதுச்சேரி முதலமைச்சர். இந்த அவலங்கள் எல்லாம் தீர, இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வர வேண்டும். நாடு மீண்டும் ஜனநாயகப் பாதையில் கம்பீரமாக நடைபோடவேண்டும்!மாநில உரிமைகள் மட்டுமல்ல,யூனியன் பிரதேசங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான்இந்தியா கூட்டணியை நாடுதழுவிய அளவில் அமைத்திருக்கிறோம்.

புதுச்சேரி முன்னேறவேண்டும் –புதுச்சேரி மக்களின் வாழ்க்கையில் புதிய மலர்ச்சி ஏற்படவேண்டும் என்றால்,பா.ஜ.க. ஆட்சி வீட்டுக்குப் போகவேண்டும்!இந்தியா கூட்டணி தில்லியில் ஆட்சியில் அமரவேண்டும்! ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமையும்போது, சாதனைகளாக மாறப்போகும் வாக்குறுதிகளைச் சொல்லியிருக்கிறோம். அதில் முக்கியமான வாக்குறுதியான, புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தோம். அது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் எதிரொலித்திருக்கிறது. புதுச்சேரி மக்களின் பலநாள் கனவான, மாநில அந்தஸ்து ஜூன்4-ஆம் தேதி இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும், நிறைவேறப் போகிறது!

அதுமட்டுமல்ல,சகோதரர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தேர்தல்அறிக்கையில் வெளியிட்டிருக்கும் வாக்குறுதிகளில், முக்கியமானசிலவற்றை மட்டும் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். ஒன்றிய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும். நாடு முழுவதும் பொருளாதார, சமூக, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும். ஒன்றியத்தில் இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 விழுக்காடு என்பதை உயர்த்தச் சட்டத்திருத்தம் செய்யப்படும்!

காங்கிரசும் - தி.மு.க.வும் நாட்டு நலன்களில் அக்கறைகொண்டு வாக்குறுதிகளை அளிக்கிறது. 2006-இல் தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்படி கதாநாயகனாக இருந்ததோ,அப்படி அன்னை சோனியா –சகோதரர் ராகுல் காந்தி –மதிப்பிற்குரிய மல்லிகார்ஜூனகார்கே–மதிப்பிற்குரிய ப.சிதம்பரம் ஆகியோர் அளித்துள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான்இன்றைக்கு நாட்டைக் காக்கப் போகும் கதாநாயகன். இந்தியா கூட்டணி சார்பில்,சமூகநீதியைக் காப்பாற்ற -இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க -மதச்சார்பின்மையை நிலைநாட்ட -இந்தியா ஜனநாயக நாடாகத் தொடர - சபதம் எடுத்துள்ளோம்.

சாதியின் பெயரால் பிரச்சாரம்

ஆனால், பிரதமர் மோடி பிரச்சாரம் செய்வதைப் பார்க்கிறோம்.ஒரு நாட்டின் பிரதமர் –அதுவும் பத்தாண்டுகாலம் ஆட்சிசெய்த பிரதமர்என்ன பேசுகிறார்?மதத்தின் பெயரால் பிரச்சாரம் செய்கிறார்! சாதியின் பெயரால் பிரச்சாரம் செய்கிறார்!ஆனால் ஒருமுறைகூட, சமூகநீதியைப் பாதுகாப்பேன் என்றோ, இடஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்துவேன் என்றோ எங்கும் மருந்துக்கு கூட சொல்லவில்லை!ஒன்றிய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு 27விழுக்காடு இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்துவேன் என்று எங்கேயாவது வாய் திறந்தாரா?ஆனால், மக்களை ஏமாற்ற நானும் ஓ.பி.சி. என்று சொல்கிறார்!பட்டியலின - பழங்குடியின – மக்களின் இடஒதுக்கீட்டை முழுமையாக நிறைவேற்றுவேன் என்று சொன்னாரா? அதுவும் இல்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தபோதும், நாட்டு மக்களுக்குப்பெட்ரோல், டீசலைஅதிகவிலைக்கு விற்று லாபம் பார்த்ததுதான் பா.ஜ.க. அரசு! அதை லாபம் ஈட்டும் தொழிலாகப்பார்க்க ஆரம்பித்தார்கள்.உலகச் சந்தையில் விலை உயர்ந்தால் இங்கு விலையைஅதிகரிப்பவர்கள், அங்கு விலை குறைந்தால் இங்கும் குறைக்கவேண்டுமா, இல்லையா?ஆனால்,மோடி அரசு குறைக்கவில்லை.

இரக்கமற்ற பா.ஜ.க. ஆட்சி

அது மட்டுமா? உக்ரைன் – ரஷ்யா போரின்போதும் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு எரிபொருளை வாங்கினார்கள்.அதை நான் தவறுஎன்று சொல்லவில்லை.ஆனால், அதன் பயன் பொதுமக்களுக்குச் சென்று சேரவில்லை.மோடி ஆட்சிக்கு வரும்போது 119 டாலராக இருந்த ஒரு பேரல்,ஒரு கட்டத்தில் 29 டாலர் வரைசரிந்தது.ஆனால், அந்த அளவு பெட்ரோல், டீசல் விலை மக்களுக்காகக் குறைக்கப்பட்டதா? ஒரு சில கார்ப்பரேட்டுகள் மட்டும்தான் பெரிய அளவில் பலனடைந்தார்கள். கோடிக்கணக்கான மக்களுக்காக விலையைக் குறைக்காமல், ஒரு சிலர் மட்டும் லாபம் ஈட்டினால் போதும் என்று ஆட்சி நடத்தும் இந்த இரக்கமற்ற பா.ஜ.க. ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும்.

புதுச்சேரி இழைக்கப்பட்ட அநீதிகள் தான் அதிகம்

கடந்த பத்தாண்டுகால மோடி ஆட்சியில் புதுச்சேரி இழைக்கப்பட்ட அநீதிகள் தான் அதிகம்!மின்சாரத்துறையைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.மின் ஊழியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது.மின் கட்டணம் கேட்டாலே ஷாக் அடிக்கிறது!புதுச்சேரியில் ஒவ்வொரு நாளும்துணைநிலை ஆளுநர்களைவைத்து,அரசியல் கூத்துகளை அரங்கேற்றிக்கொண்டு இருந்தார்கள்.கிரண் பேடி காமெடிகள் முடிந்த பிறகு,சகோதரி தமிழிசை வந்தார்கள்.புதுச்சேரியில் உட்கார்ந்துகொண்டு,தமிழ்நாட்டு அரசியலைப் பேசிக்கொண்டு இருந்தார்கள்.தேர்தல் வந்ததும் பா.ஜ.க.விற்கேமீண்டும்சென்றுவிட்டார்கள்!புதுச்சேரி வரலாற்றில் ராஜ் நிவாஸ் வாசலிலே,முதலமைச்சராக இருந்த நாராயணசாமி அவர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதுதான் புதுச்சேரிக்கு பா.ஜ.க. செய்த சாதனை.

“பெஸ்ட் புதுச்சேரி“.

இங்கு வாக்கு கேட்டு வந்த பிரதமர் மோடி என்ன கூறினார். “பெஸ்ட் புதுச்சேரி“.தொழில் – சுற்றுலா – கல்வி போன்றவற்றில் புதுச்சேரியை பெஸ்ட்ஆக்குவோம் என்று சொன்னாரே – செய்தாரா?காங்கிரஸ் அரசிடம் ஏதோ ரிப்போர்ட்கார்டெல்லாம் கேட்டாரே –பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சி ரிப்போர்ட் கார்டு எங்கே?வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி ரிப்போர்ட் கார்டு வேண்டாம். நாங்கள் கேட்பது, ஒரிஜினல்ரிப்போர்ட் கார்டு!நாராயணசாமி அவர்கள் கட்சி மேலிடத்தைக் கேட்டு நடக்கிறார்என்று குறை கூறினார். ஆனால், இப்போது வேறு கட்சியை சேர்ந்தமுதலமைச்சர் ரங்கசாமியைத் தங்களின் பேச்சைக் கேட்கச் சொல்லி என்ன பாடு படுத்துகிறார்கள்?அன்றைக்கு முதலமைச்சராக இருந்த நாராயணசாமிக்குப்போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லைஎன்று ஏதோ பெரிதாக ஆதங்கப்பட்டுப் பேசினீர்களே.

இன்றைக்குப் புதுச்சேரியில் முதலமைச்சராகஇருப்பது யார்? ரங்கசாமி! உங்கள் கூட்டணியில் எது பெரிய கட்சி? ரங்கசாமியின் கட்சி! புதுச்சேரியில் எத்தனை நாடாளுமன்றத் தொகுதி இருக்கிறது? ஒரே ஒரு தொகுதி! அதிலும் பா.ஜ.க.தான் போட்டியிடும் என்று அவர் வாயாலேயே சொல்ல வைத்தீர்கள். ரங்கசாமி தனிக்கட்சி ஆரம்பிக்கக் காரணமே நமசிவாயம் தான்! இப்போது அந்த நமசிவாயத்திற்கு ஓட்டு கேட்டு வரும் நிலைமையை ரங்கசாமிக்குஉருவாக்கி, அந்தக் கட்சியையும் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் ஜனநாயகமா?உள்துறை அமைச்சராக சும்மா உட்கார்ந்துக்கொண்டு இருந்தவரை, தேர்தலில் நிறுத்தியிருக்கிறார்கள்.

நமசிவாயம் எத்தனை கட்சி மாறி இருக்கிறார் என்ற வாங்கிப் பார்த்தப்போது எனக்கே தலைசுற்றியது. தி.மு.க.வில் இருந்த நமசிவாயம் – ம.தி.மு.க.வுக்குத் தாவினார்.ம.தி.மு.க.-இல் இருந்து த.மா.கா.வுக்குத் தாவினார்.த.மா.கா.வில் இருந்து புதுவை மாநில காங்கிரசுக்கு தாவினார்.புதுவை மாநில காங்கிரசில் இருந்து மீண்டும் த.மா.கா.வுக்குத் தாவினார்.த.மா.கா.வில் இருந்து காங்கிரசுக்குத் தாவினார்.காங்கிரசில் இருந்து பா.ஜ.க.வுக்கு தாவினார்.இன்னும் இரண்டு மாதம் கழித்து நான் வந்தால் அவர் எந்தக் கட்சியில் இருப்பாரோ? யாமறியேன் பராபரமே. அது நமசிவாயத்திற்கே தெரியாது.

பா.ஜ.க.வால் புதுச்சேரி அடைந்த நன்மை என்ன?

பா.ஜ.க.வால் புதுச்சேரி அடைந்த நன்மை என்ன?“நான் ஆட்சிக்கு வந்தால், ஒரு மீனவர் கூட தாக்கப்பட மாட்டார் – கைது செய்யப்பட மாட்டார்”என்றுவீரவசனம்பேசினாரே பிரதமர் மோடி. ஆனால், இலங்கைக் கடற்படையினரால் கரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுத்தாரா?படகுகள் பறிமுதல் செய்யப்படுவதைத் தடுக்க முடிந்ததா?அவர் விஷ்வகுரு இல்லை, மவுனகுரு! அதுமட்டுமல்ல, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது!அதற்குசமீபத்திய எடுத்துக்காட்டு, விளையாடிக் கொண்டிருந்த சிறுமிஒருவர் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்ட படுபாதகச் செயல்!நாடே அந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததே! பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில், பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லாத சூழல்தான் நிலவுகிறது!இந்தியா முழுவதும் பெண்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு பா.ஜ.க. ஆட்சியில் கேள்விக்குறியாக இருக்கிறது!ரங்கசாமி அவர்களை டம்மியாக உட்கார வைத்துவிட்டு,பா.ஜ.க. பம்மாத்து ஆட்சியை இங்கு நடத்திக்கொண்டுஇருக்கிறது.

புதுச்சேரிக்கு ஒரு சட்டமன்றம் கட்டும் உரிமைகூட இல்லை. புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இருக்கிறதா?ஏழைகளின் வயிற்றில் அடித்திருக்கிறது, ரங்கசாமிதலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி, பட்டியல் இனத்து மக்களுக்கான சிறப்புக் கூறு நிதி அவர்களுக்காக உண்மையாகவேசெலவிடப்பட்டிருக்கிறதா? பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் இங்கே மூடப்பட்டிருக்கிறது. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைசெய்தஊழியர்களின் குடும்பங்கள் நடுரோட்டிற்கு வந்துவிட்டார்கள்.தேர்தல் வந்தால்தான் ரங்கசாமிக்கு மாநில அந்தஸ்து என்ற ஞானோதயம் வரும்.கடந்த 3 ஆண்டுகளாக அதற்காக என்ன நடவடிக்கை எடுத்தார்கள் இவர்கள்?ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஒரே கட்சி – ஒரே கூட்டணிக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், தேனாறும் பாலாறும் ஓடும் என்று சொன்னார்ளே?புதுச்சேரியில் ஓடியதா?

அ.தி.மு.க. கூட்டணி - சிம்ப்ளி வேஸ்ட்!

புதுச்சேரி மக்கள் போராடிப் பெற்ற விடுதலையை, மக்களின் உரிமையை ஒன்றிய மோடி அரசு பறிக்க விட்டு, வேடிக்கை பார்த்த ரங்கசாமி,இப்போது எந்த முகத்துடன் பா.ஜ.க.வுக்காக வாக்குகள் கேட்டு வருகிறார்? இதில்மற்றொரு பக்கம்பாதம்தாங்கி பழனிசாமியின் அ.தி.மு.க. வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை! சிம்ப்ளி வேஸ்ட்! பா.ஜ.க. வேட்பாளரின் நன்மைக்காகதான் அ.தி.மு.க. இங்கு தேர்தலில் நிற்கிறது என்பதுபுதுச்சேரி மக்களான உங்களுக்கே நன்றாகத் தெரியும். பல்வேறு பண்பாடுகள் - சாதி, இன, மொழி கடந்த மக்கள் ஒற்றுமையாக வாழும் புதுச்சேரி மக்கள் -ஒன்றிய மோடி அரசின்பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகக் கூடாது. இந்தியா கூட்டணியின் வேட்பாளராக -காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த- முன்னாள் முதலமைச்சர் வைத்திலிங்கம் அவர்கள் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு இந்தியாவைக் காக்கும் வாக்கு, புதுச்சேரியைக் காக்கும் வாக்கு!

நிறைவாக, எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் வரிகளில் முடிக்கிறேன்.“புதுச்சேரி என்பது படுத்துக் கொண்டிருக்கும் சிங்கம். அந்த சிங்கத்திற்கு சோதனை வந்தால் அது சிலிர்த்து எழும்”. அந்த வரிகளை உண்மையாக்க - புதுவை காக்க - புதுவை மக்களே எழுக! என்று உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்.வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் புதுவைத் தொகுதியில் நம்முடைய இந்தியா கூட்டணி கட்சியின் - காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் வைத்திலிங்கம் அவர்களுக்கு நீங்கள் கை சின்னத்தில் ஆதரவு தர வேண்டும் என்று கேட்கிறேன்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
IPL Valuation: சிஎஸ்கே-விற்கா இந்த நிலைமை? கன்னாபின்னாவென எகிறிய ஐபிஎல் மதிப்பு, கொட்டிக் கொடுக்கும் டாடா
IPL Valuation: சிஎஸ்கே-விற்கா இந்த நிலைமை? கன்னாபின்னாவென எகிறிய ஐபிஎல் மதிப்பு, கொட்டிக் கொடுக்கும் டாடா
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; ரயில் வரும்போது பள்ளி வேனை ஓட்டியது ஏன்? ஓட்டுனர் சங்கர் பரபரப்பு பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; ரயில் வரும்போது பள்ளி வேனை ஓட்டியது ஏன்? ஓட்டுனர் சங்கர் பரபரப்பு பேட்டி
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
IPL Valuation: சிஎஸ்கே-விற்கா இந்த நிலைமை? கன்னாபின்னாவென எகிறிய ஐபிஎல் மதிப்பு, கொட்டிக் கொடுக்கும் டாடா
IPL Valuation: சிஎஸ்கே-விற்கா இந்த நிலைமை? கன்னாபின்னாவென எகிறிய ஐபிஎல் மதிப்பு, கொட்டிக் கொடுக்கும் டாடா
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; ரயில் வரும்போது பள்ளி வேனை ஓட்டியது ஏன்? ஓட்டுனர் சங்கர் பரபரப்பு பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; ரயில் வரும்போது பள்ளி வேனை ஓட்டியது ஏன்? ஓட்டுனர் சங்கர் பரபரப்பு பேட்டி
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
Cuddalore Train Accident: சோகத்தின் உச்சம்.. பள்ளி வேனில் பயணித்த அக்கா, தம்பி மரணம் - இரக்கம் இல்லையா இறைவா?
Cuddalore Train Accident: சோகத்தின் உச்சம்.. பள்ளி வேனில் பயணித்த அக்கா, தம்பி மரணம் - இரக்கம் இல்லையா இறைவா?
திமுகவின் துணை அமைப்பா டிஎன்பிஎஸ்சி? முட்டு கொடுப்பதை ஐடி விங் பார்க்கட்டும்- கொந்தளித்த அன்புமணி!
திமுகவின் துணை அமைப்பா டிஎன்பிஎஸ்சி? முட்டு கொடுப்பதை ஐடி விங் பார்க்கட்டும்- கொந்தளித்த அன்புமணி!
கிண்டியில் துப்பாக்கியால் மிரட்டல் விடுத்த நபர்... நடந்தது என்ன?
கிண்டியில் துப்பாக்கியால் மிரட்டல் விடுத்த நபர்... நடந்தது என்ன?
Cuddalore Train Accident: கடலூர் ரயில் - வேன் விபத்து; மாணவர்கள் மரணத்திற்கு காரணம் கேட்கீப்பரா? ஓட்டுனரா?
Cuddalore Train Accident: கடலூர் ரயில் - வேன் விபத்து; மாணவர்கள் மரணத்திற்கு காரணம் கேட்கீப்பரா? ஓட்டுனரா?
Embed widget