மேலும் அறிய

PM Modi Exclusive Interview: ரூ.2,200 கோடி பறிமுதல் செய்த அமலாக்கத்துறை, மாநிலங்களில் ஊழல் - பிரதமர் மோடி

PM Narendra Modi Exclusive: கடந்த 10 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, ஏபிபி செய்தி குழுமத்திற்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார்.

PM Narendra Modi Exclusive: கடந்த 10 ஆண்டுகளில் அரசியல் சார்பின்றி ஊழல்வாதிகள் மீது, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பிரதமர் மோடி பிரத்யேக பேட்டி:

2024 மக்களவைத் தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப்பதிவிற்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி ஏபிபி செய்தி குழுமத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அமோக ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்ததோடு,  தனது நிர்வாக முறை, பாஜக தலைமையிலான கூட்டணி, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாகவும் பேசினார்.

மேற்குவங்கத்தில் ஊழலால் காணாமல்போன 3000 கோடி ரூபாயும் மீட்கப்படும் எனவும் மோடி உறுதியளித்துள்ளார்.

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள்:

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பேசியபோது, “எந்த அரசியல் கட்சி மற்றும் சித்தாந்தத்தையும் பொருட்படுத்தாமல், முன்பெல்லாம் ஊழல் வழக்குகளில் பெரிய சுறாக்கள் தப்பித்துக்கொள்ள சிறிய மீன்கள் மட்டும் சிக்கின. ஆனால், இப்போதெல்லாம் பெரிய மீன்கள் தப்புவது இல்லை. அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) போன்ற அமைப்புகளின் பணியை பொதுமக்கள் பாராட்ட வேண்டும்” என்று மோடி வலியுறுத்தினார்.

மேலும், “கேமரா முன் மலைபோல் கரன்சி நோட்டுகள் காட்டப்படுகின்றன, அதை எப்படி மறுக்க முடியும்? 2004 முதல் 2014 வரை அமலாக்கத்துறை 34 லட்ச ரூபாயையும், 2014 முதல் 2024 வரை 2,200 கோடி ரூபாயையும் கைப்பற்றியுள்ளது. தனது ஆட்சியில் ஊழல் எந்த அளவிற்கு குறைந்துள்ளது என்பதை காட்டுகிறது” எனவும் தெரிவித்தார்.

நீதி வழங்குவது அவசியம் - மோடி:

நீதிக்கான தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தும் பிரதமர் மோடி, "தற்போது நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. தவறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தவறாகக் கூற முடியாது. தவறு செய்த பெரும் புள்ளிகள் கூட சிறையில் உள்ளன. எனக்குத் தெரிந்தோ தெரியாமலோ, குற்றம் செய்தவர்கள் சிறையில் உள்ளனர்.

பாவங்கள் அதற்கான விளைவுகளை சந்திக்கும். தங்களது கஜானாவை நிரப்ப அரசாங்கத்திடம் பணம் இல்லை. யாராவது வீட்டைக் கொள்ளையடித்தாலும், அரசாங்கமே கொள்ளையடித்தாலும் பரவாயில்லை. மக்கள் தங்கள் பணத்தை திரும்பப் பெறுவதையே மனதில் கொள்வார்கள். கொள்ளையடிக்கப்பட்ட பணம் மக்களுக்கே திரும்பக் கிடைக்க வேண்டும் என்பது என் நம்பிக்கை” என மோடி வலியுறுத்தினார்.

பல மாநிலங்களில் ஊழல்:

பல்வேறு மாநிலங்களில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக பேசும்போது, “பீகாரில் வேலைக்கு மாற்றாக நிலங்கள் பெறப்பட்டுள்ளன. நிலத்தைத் திருப்பித் தர முடியுமா என்று நான் கேட்டேன். வங்காளத்தில், ஆசிரியர் ஆவதற்கு அதிகாரப்பூர்வ கட்டண அட்டை உள்ளது. எனவே, உண்மையான தகுதி உள்ளவர்கள் பணியை தொடரவும், தகுதியற்ற நபர்கள் பணியில் இருந்து நீக்கப்படவும் சட்டக் குழுவை அமைக்குமாறு எனது கட்சியினரிடம் கூறினேன்.

அரசு 3,000 கோடி ரூபாய் பறிமுதல் செய்து, 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது. கேரளாவில், பெரும்பாலும் எல்.டி.எஃப் உறுப்பினர்களால் நடத்தப்படும் கூட்டுறவு வங்கிகளில் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. இது நடுத்தர குடும்பத்தினரால் கடினமாக உழைத்து சம்பாதிக்கப்பட பணம், ஆனால் வங்கிகள் தோல்வியடைகின்றன.  எனவே குற்றம் சாட்டப்பட்டவரின் சொத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டேன்” என மோடி பேசினார்.

மக்களிடம் திரும்ப வழங்கப்படும் - மோடி:

கைப்பற்றப்பட்ட பணத்தை மக்களிடம் திருப்பித் தருவதற்கான அரசின் முயற்சிகளை எடுத்துரைத்த மோடி, “ஏற்கனவே ரூ.1,700 கோடியை திருப்பி அளித்துள்ளோம், மக்களின் பணம் அவர்களுக்கே திரும்பச் செல்ல வேண்டும்” என்றார்.

இந்திய தண்டனைச் சட்டத்தை விடுத்து ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும்,  பாரதீய நியாய் சன்ஹிதாவின் உதவியுடன்,  பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் விரைந்து பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் எனவும் மோடி பேசியுள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget