PM Modi TN Visit LIVE: திமுகவை வீட்டுக்கு அனுப்ப பாஜகவால் மட்டுமே முடியும் - பிரதமர் மோடி
சென்னையில் இன்று மாலை பிரதமர் மோடி ரோடு ஷோவில் பங்கேற்கவுள்ள நிலையில் அதுகுறித்தான அப்டேட்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
LIVE

Background
திமுகவை வீட்டுக்கு அனுப்ப பாஜகவால் மட்டுமே முடியும் - பிரதமர் மோடி
திமுகவை வீட்டுக்கு அனுப்ப பாஜகவால் மட்டுமே முடியும் என நீலகிரி பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
PM Modi TN Visit LIVE: திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பில்லை - பிரதமர் மோடி
தமிழகத்தை பழைய சிந்தனையில் சிக்க வைக்க நினைக்கும் தி.மு.க., பழைய அரசியலில், ஒட்டுமொத்த தி.மு.க.வும் ஒரு குடும்பத்தின் நிறுவனமாகிவிட்டது. திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பில்லை. திமுகவில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும், திமுகவில் முன்னேறுவதற்கும் மூன்று முக்கிய அளவுகோல்கள் உள்ளன. மூன்று முக்கிய அளவுகோல்கள் - குடும்ப அரசியல், ஊழல் மற்றும் தமிழ் கலாச்சார எதிர்ப்பு - பிரதமர் மோடி
PM Modi TN Visit LIVE: பாஜக வேட்பாளர்கள் அளிக்கும் வாக்கு, இது பிரதமர் மோடியின் வாக்கு - பிரதமர் மோடி
பாஜக வேட்பாளர்கள் அளிக்கும் வாக்கு, இந்தியாவை முன்னேற வைக்கும், தமிழ்நாட்டை முன்னேற வைக்கும் இது இந்த மோடியின் வாக்கு என வேலூரில் பிரதமர் மோடி பேசி வருகிறார்.
PM Modi TN Visit LIVE: தமிழகத்தில் போதைப்பொருட்கள் கடத்தல் அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி
குடும்ப அரசியல், ஊழலால் திமுக தமிழகத்தை பின்னோக்கி அழைத்து செல்கிறது. தமிழகத்தை திமுக குடும்பம் கொள்ள அடிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு ரூ.4 ஆயிரம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது திமுக. திமுக பழைய சிந்தனையிலேயே இருக்கிறது. தமிழகத்தில் போதைப்பொருட்கள் கடத்தல் அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி
PM Modi TN Visit LIVE: ஒட்டுமொத்த திமுகவும் ஒரு குடும்பத்தின் சொத்து - பிரதமர் மோடி
ஒட்டுமொத்த திமுகவும் ஒரே ஒரு குடும்பத்தின் சொத்தாக உள்ளது. தமிழ்நாட்டை திமுக பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. தமிழகத்தை திமுக குடும்பம் கொள்ளை அடிக்கிறது - பிரதமர் மோடி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

