PM Modi: பாஜக வெற்றி...தொடங்கியாச்சு ஹோலி..! குஷி மோடில் பிரதமர் மோடி! உற்சாக பேச்சு!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோரும் பாஜக தலைமையகத்தில் இருந்தனர்.
2022ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சித் தொண்டர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ஹோலி பண்டிகை மார்ச் 10ஆம் தேதி தொடங்கும் என்று முன்பே கூறியிருந்தோம். அதன்படி, 4 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளோம். எங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொண்டர்களால் இந்த ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்று, பாஜகவை வெற்றி பெறச் செய்ததற்காக அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றிகள்” என்றார்.
இந்த நாளை ஜனநாயகத்தின் பண்டிகை என்று கூறிய பிரதமர் மோடி, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம் ஹோலி பண்டிகை தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும், “கோவாவில் அனைத்து கருத்துக் கணிப்புகளும் தவறாக நிரூபிக்கப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக புதிய வரலாற்றை எழுதியுள்ளது. 2019இல் மத்தியில் நாங்கள் ஆட்சி அமைத்தபோது, 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் பெற்ற வெற்றிதான் காரணம் என்று நிபுணர்கள் கூறினார்கள். 2022 தேர்தல் முடிவுகள் 2024 நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் என்று அதே நிபுணர்கள் சொல்வார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.
#WATCH | I can already see BJP emerging as 'A force to reckon' with', in Punjab...Our Punjab workers have made the party and our flag proud with their work in Punjab despite difficult circumstances....: PM Modi pic.twitter.com/LHgEbI14Si
— ANI (@ANI) March 10, 2022
தேர்தலில் பெண்களின் பங்கு குறித்துப் பேசுகையில், “மாநிலங்களில் நடைபெற்ற இந்தத் தேர்தல்களில் பெண்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். அவர்கள் எங்களை ஆசீர்வதித்துள்ளனர். பெண் வாக்காளர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் நாங்கள் சிறப்பாக வெற்றி பெற்றுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசாங்கம் மீண்டும் தன்னைத்தானே நிரூபிப்பதாகத் தெரிகிறது. இதற்கு முன் கடைசியாக 1985ல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.அப்போது மொத்தமுள்ள 425ல் 269 இடங்களை காங்கிரஸ் பெற்றது. அப்போது உ.பி.யில் 425 இடங்கள் இருந்தது. 2017 தேர்தலிலும் பாஜக 325 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
உத்தரபிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இந்த நான்கு மாநிலங்களிலும் கடந்த காலங்களில் பாஜக தலைமையிலான அரசுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்