MK Stalin Ministers List: திமுக அமைச்சரவையில் 15 புதுமுகங்கள், 2 பெண் அமைச்சர்கள்
33 பேர் கொண்ட பட்டியலில் 15 பேர் புதுமுகங்கள். அதில், இரண்டு பெண் அமைச்சர்கள் ஆவர்.
திமுக அமைச்சரவையில் புதியவர்கள் 15 பேருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. அதில், இரண்டு பெண் அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை தக்க பிடித்துள்ளது. முதல்வராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அதற்கான முறைப்படி பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.
அது தொடர்பான பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் குறிப்பிட்ட படி அமைச்சகர்கள் பொறுப்பு ஏற்க உள்ளனர். இந்த 33 பேர் கொண்ட பட்டியலில் 15 பேர் புதுமுகங்கள். அதில், இரண்டு பெண் அமைச்சர்கள் ஆவர்.
யார் அந்த 15 பேர்..?
அர. சக்கரபாணி - உணவுத்துறை
ஆர்.காந்தி - கைத்தறி மற்றும் துணிநூல் துறை
மா.சுப்பிரமணியன் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
பி.மூர்த்தி - வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு
எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
பி.கே.சேகர் பாபு - இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை
பழனிவேல் தியாகராஜன் - நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை
சா.மு.நாசர் - பால்வளத்துறை
செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மையினர் நலத்துறை
அன்பில் மகேஷ் பொய்யா மொழி - பள்ளிக்கல்வித்துறை
சிவ.வீ.மெட்டநாதன் - சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை
சி.வி.கணேசன் - தொழிலாளர் நலத்துறை
த.மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத்துறை
மா.மதிவேந்தன் - சுற்றுலாத்துறை
என்.கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலத்துறை
2 பெண் அமைச்சர்கள்
கீதா ஜீவன் - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலத்துறை